கோவை, ஆக. 7- பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் பிரலோப். இவரது மனைவி பீனா பிரீத்தி. இவர்களுக்கு 3 வயதில் ஹாதியா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் தங்களின் குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை என்று குறிப்பிடும் வகையில் சான்றிதழ் வாங்க வேண்டும் என அவர்களது பெற்றோர் முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தனர்.
விண்ணப்பங்களை பரிசீலித்த அதிகாரிகள் நேற்று (6.8.2023) பிரலோப்-பிரீத்தி இணையரின் குழந்தை ஹாதியாவுக்கு ஜாதி, மதம் இல்லையென்ற சான்றிதழ் வழங்கினர். அதில் ஹாதியாவுக்கு ஜாதி, மதம் இல்லை என்று குறிப் பிடப்பட்டு உள்ளது. எல்லோரும் இந்தியர்கள் என்ற மனநிலை மட் டும் இருந்தால் போதும். எங்கள் மகளை ஜாதி,மதம் என எதை வைத்தும் பிரிக்க வேண்டாம் என முடிவு செய்தோம். இவ்வாறு சான்று பெறுவதால் வருங்காலத் தில் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையும் எங் கள் குழந்தை பெற இயலாது என்று தெரிந்து தான் விண்ணப்பித்தோம். சான்று பெற விண்ணப்பித்து, அதனை பெறுவதில், சிறிது கால தாமதம் ஏற்பட்டது. ஏன் இதை வாங்குகிறீர்கள் என நிறைய கேள் விகள் கேட்டனர். அதிகாரிகளுக்கு இவ்வாறு சான்று அளிப்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.
தமிழக அரசு ஏற்கெனவே பள்ளிகளில் குழந்தைகளை சேர்க் கும்போது பெற்றோர் விருப்பப் பட்டால், மாற்றுச் சான்றிதழில் ஜாதி, மதமில்லை என்று குறிப் பிடலாம். அல்லது அந்த கேள்விக் கான இடத்தை அப்படியே விட்டு விடலாம் என்று அரசாணை வெளியிட்டு உள்ளது. இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. எங்களைப் போல பலரும் தங்களின் குழந்தைகளுக்கு ஜாதி, மதம் இல்லாத சான்றிதழ் பெற விரும்புகின்றனர். ஆனால் இதற்காக எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரம் அவர்க ளுக்கு முழுமையாக தெரியவில்லை. எனவே அரசாங்கம் இதுகுறித்து பொது மக்களிடம் போதிய விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.