சென்னை, செப். 3- சென்னை பெரியார் புத்தக நிலைய மேலாளர், திராவிடன் நிதி இயக்குநர், பெரியார் பெருந்தொண்டர் த.க.நடராசன் கடந்த 22.8.2024 அன்றிரவு மறைவுற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளிநாட்டுப்பயணத்துக்கிடையே 23.8.2024 அன்று காலையிலேயே த.க.நட ராசன் இல்லத்தில் அவரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி, குடும் பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
மோகனா வீரமணி, கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சுதா அன்புராஜ் ஆகியோர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
பெரியார் திடலில் 23.8.2024 அன்று காலை பெரியார் நினைவிட நுழைவாயில் அருகில் அவரது உடல் வைக்கப்பட்டு கழகப்பொறுப்பாளர்கள், பெரியார் திடல் பணித் தோழர்கள் மரியாதை செலுத்திய பின்னர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக அவரது உடல் கொடையாக அளிக்கப்பட்டு ஒப் படைக்கப்பட்டது.
அவரது விழிகள் கொடையாக அளிக்கப் பட்டதுடன் அவரது உடலும் மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்காக கொடையாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று (2.9.2024) மாலை சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற சுயமரியாதைச் சுடரொளி த.க.நடராசன் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் த.க.நடராசன் படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, வழக்குரைஞர் சு.குமார தேவன், திராவிடன் நிதி அருள்செல்வன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற பொதுச்செயலாளர் கோ.ஒளிவண்ணன் ஆகியோரது இரங்கல் மற்றும் நினைவேந்தல் உரையைத் தொடர்ந்து. நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவுரை ஆற்றினார்கள்.
த.க.நடராசன் மற்றும் அவரது குடும்பத்தினர் தந்தை பெரியார் கொள்கைவழியில் தொடர்ந்து கொண்டிருப்பதையும், அக்குடும்பத்தினரை 75 ஆண்டுகளாக அறிந்து கொள்கை உறவு தொடர்வதையும், த.க.நடராசன் தொண்டறம், ஆற்றல், ஆளுமை மூலம் அறக்கட்டளை நிர்வாகத்துக்குப் பெரிதும் உற்ற துணையாக அவர் திகழ்ந்ததையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
பெரியார் திடலில் த.க.நடராசன்-குஞ்சிதம் நினைவாக ஒரு கட்டடத்துக்கு பெயர் சூட்டப்படும்
பெரியார் திடலில் த.க.நடராசன்-குஞ்சிதம் நினைவாக ஒரு கட்டடத்துக்கு பெயர் சூட்டப்படும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்தார். சுயமரியாதைச் சுடரொளி த.க.நடராசன் குடும்பத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகத்துக்கு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.
துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
கலந்துகொண்டோர்
த.க.நடராசன் மகன் கண்ணுதுரை, மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினர், மோகனா வீரமணி, மருத்துவர் மீனாம்பாள், சி.வெற்றிசெல்வி, சுதா அன்புராஜ், சிங்கப்பூர் கவிதா மாறன், ஆடிட்டர் இராமச்சந்திரன், விழிகள் வேணுகோபால், பொறியாளர் வேல்சோ.நெடுமாறன், காரைக்குடி சாமி.சமதர்மம், தலைமைக்கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், இரா.வில்வநாதன், தளபதி பாண்டியன், வெ.மு.மோகன், செ.ர.பார்த்திசாரதி, புரசை சு.அன்புச்செல்வன், ஆ.வெங்கடேசன், கோ.தங்கமணி, பசும்பொன், தங்க.தனலட்சுமி, பெரியார் திடல் பணியாளர்கள், புதுமை இலக்கிய தென்றல் மற்றும் பெரியார் நூலக வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள், கழகப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.