இன்றைக்குச் சினிமாவிற்கு ஓரளவு கவர்ச்சி இருக்கிறது என்றால் காரணம் மக்களுக்கு இருக்கிற சிற்றின்ப உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்திருப்பது தானாகும். மற்றபடி சினிமா மக்களுக்கு நல்ல பகுத்தறிவை ஊட்டும் வகையில் பயன்படுகின்றதா? மக்களுக்குப் பயன்படும் வண்ணம் சினிமாக் கலை மாற்றம் பெற வேண்டாமா?