பாப்பிரெட்டிப்பட்டி, செப்.2- தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 30.8.2024 வெள்ளிக்கிழமை அன்று பாப்பிரெட்டிப்பட்டி நரசுஸ் காபி திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பெ. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியை பாப்பிரெட்டிப் பட்டி பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி தொடங்கி வைத்தார். மாவட்ட கழகத் தலைவர் கு. தங்கராஜ், கழக காப்பாளர் அ.தமிழ்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஜீவிதா, மொரப்பூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் அறிவுமணி, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மு, சிலம்பரசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற பொறுப்பாளர் பாளையம் பசுபதி ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
மாநில கலைத்துறை செயலாளர், இயக்குநர் மாரி. கருணாநிதி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, ஒருங்கிணைத்து நடத்தினார். மாநில தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.
‘‘பெரியார் ஒரு கேள்விக்குறி’’, ‘‘என்றும் தேவை பெரியார்’’, ‘‘பெரியார் காண விரும்பிய சமுதாயம்’’, ‘‘புரட்சி யாளர் பெரியார்’’, ‘‘பெரியாரால் வாழ்கிறோம்’’, ‘‘பெரியார் பிறவாமல் இருந்திருந்தால்’’ போன்ற தலைப்புகளில், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரி, அரசினர் கலைக் கல்லூரி, அரூர் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கடத்தூர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், மாணவிகள் பேச்சு போட்டியில் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றி தழ் வழங்கப்பட்டது
போட்டியில், முத்தமிழரசன் முதல் பரிசு (ரூபாய் 3000) கோ.இனியகவி, இரண்டாம் பரிசு (ரூபாய் 2000) சுபலட்சுமி (ரூபாய் 1000) பெற்றனர். அவர்களுக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சா. ராஜேந்திரன், டாக்டர் பழனிசாமி பேரூர் கழக தலைவர் செங்கல் மாரி ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தனர். பேச்சுப் போட்டிக்கான நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல் மாண வர்களுக்கான பயிற்சி பட்டறையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.