கடலூர், செப்.2 கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் இனியா இலக்கியத் தோட்டத்திம் வசனாங்குப்பத்தில் நேற்று (1.9.2024) காலை 10 மணி நடைபெற்றது.
கழக காப்பாளர் அரங்க பன்னீர் செல்வம் தலைமை தாங்க, பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன், மாவட்டத் தலைவர் சொ. தண்டபாணி, மாவட்ட செயலாளர் க.எழில்லேந்தி, மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், மாவட்ட இணை செயலாளர் நா.பஞ்சமூர்த்தி ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
நிகழ்வில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடுவது, பெரியார் படத்தை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று இல்லம்தோறும் கழகக் கொடியினை உயர்த்தி பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில், மாநில பகுத்தறிவு கழக அமைப்பாளர் இரா.பெரியார் செல்வம், மாநில இளைஞரணி துணை செயலாளர் கோவேலு, மாவட்ட இளைஞரணி தலைவர் நா.உதய சங்கர், அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், வடலூர் சு. இராவணன், கடலூர் தர்மன், இரா.சின்னதுரை, வடலூர் இரா குணசேகரன், இரா.கண்ணன், ந.கனகராஜ், வடலூர் முருகன், பா.செந்தில்வேல், இரா. கந்தசாமி, இரு.ராஜேந்திரன், தமிழ்மணி சுமலதா, சத்யாவதி, குணசுந்தரி, கனிமொழி வேணுகோபால், மங்கலட்சுமி, இரி.முத்தையன் செல்வராணி, அறிவுச்செல்வன், அருண், அறிவுப் பொன்னி, அறிவுச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். உ.அன்புக்கனி நன்றி கூறினார்.