சென்னை, ஆக.8 – தமிழ் நாட்டின் இளைஞர்களை உலகின் தலைசிறந்தவர்களாக ஆக் குவதே எனது நோக்கம் என ‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள் விளை யாட்டு அரங்கில் ‘நான் முதல்வன் திட்டம்’ தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை யடுத்து வெற்றி விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நடந்தது. இதில் அமைச் சர்கள், க.பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன், பெரியகருப்பன், பி.கே.சேகர் பாபு, சிவசங்கர், காந்தி, சி.வி.கணேசன், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ், பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், கயல்விழி செல்வராஜ், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.
‘நான் முதல்வன் திட்ட’ ஓராண்டு வெற்றி விழாவை யொட்டி அதற்கான இசைத் தட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், இந்த இசை ஆல்பத்தினை உருவாக்கிய குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார். மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற் றாண்டை சிறப்பிக்கும் வகையில் ‘‘கலைஞர் 100’’ என்ற இணைய தளத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
பின்னர், விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
5 முறை தமிழ்நாட்டை ஆண்டு இன்று நாம் காணும் தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞரின் அய்ந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று. கலை ஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் உரு வாக்கப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளேன்.
கலைஞர் அவர்களே நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை நான் அமர்ந்து செய்து கொண்டு இருக்கிறேன் என எழுதி இருந் தேன். அந்தவகையில் கலைஞருக் கும் பிடிக்கக்கூடிய திட்டம் தான் இந்த நான் முதல்வன் திட்டம். நான் முதல்வன் திட் டம் என்னுடைய கனவு திட்டம்.
தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் கல்வியில், சிந் தனையில், அறிவாற்றலில் பன் முக ஆற்றலில் முன்னேறக் கூடிய வகையில் அவர்களை உயர்த்த வேண்டும் என்று எண்ணி இந்த திட்டத்தை கடந்தாண்டு மார்ச் 1ஆம் தேதி என்னுடைய பிறந்த நாளில் தொடங்கி வைத்தேன்.
இதில் இருந்தே எந்தளவிற்கு இந்த திட்டம் நெருக்கமான திட்டம் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ளலாம். தமிழ் நாட்டின் இளைஞர்களை உல கத்திலேயே முதன்மையானவர்களாக ஆக்க வேண்டும் என்பது தான் என்னுடைய தணியாத ஆசை.
மேலும், சில திட்டங்கள் அப் போதைய தேவைகளை நிறைவு செய்வதாக இருக்கும். சில திட் டங்கள் ஓராண்டுக்கு பயன் பெறுவதாக இருக்கும். ஆனால் நான் முதல்வன் திட்டம் தான் தலைமுறை தலைமுறைக்கும் பயன்பெறக்கூடிய திட்டங் களாக இருக்கும். இந்த திட்டத் தினை அறிவிக்கும் போது இதனை முறையாக நடத்திக் காட்ட வேண்டும். அதேபோல, இத்திட்டத்தின் நோக்கத்தினை முழுமையாக அடைய வேண்டும் என உறுதி எடுத்துக் கொண் டேன்.
அறிவிக்கும் எந்த திட்டமும் முழுமை அடைந்து விடாது. அதனை கடைசி வரை நிறை வேற்றி காட்டுவதில் தான் வெற்றி என அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் சொல்லக் கூடியவன் நான்.
அந்தவகையில், நான் முதல் வன் திட்டம் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. நெஞ்சில் நிறைவும், முகத்தில் மகிழ்ச்சியும் பொங்க நான் உங்கள் முன்பாக நின்றுகொண்டு இருக்கிறேன். உலகை வெல்லும் இளைய தமிழ் நாட்டை உருவாக்கும் நான் முதல் வன் திட்டத்தின் வெற்றி செய்தியை சொல்வதற்காக தான் இந்த விழா நடக்கிறது.
இதற்கு காரணமான விளை யாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலினை பாராட்டு கிறேன். வாழ்த்துகிறேன். விளை யாட்டுத்துறையில் எப்படிப் பட்ட மாற்றங்களை உருவாக்கி வருகிறாரோ, அதேபோல, நான் முதல்வன் திட்டத்தினையும் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
இதற்கு உறுதுணையாக செயல்படும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் முதல்வன் திட்டத்தில் ஆண்டுக்கு 10 லட் சம் பேருக்கு திறன் பயிற்சி என இலக்கு நிர்ணயித்திருந்தோம். ஆனால், முதல் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு உயர் தரத்தில் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தான் இந்த திட்டத்தின் சாதனை. இப்படி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு மிகச்சிறந்த வேலை கிடைத்து இருப்பது தான் அடுத்த சாதனையாகும். நான் முதல்வன் திட்டம் மூல மாக 445 பொறியியல் கல்லூரி களில் திறன் பயிற்சி வழங்கப்பட் டுள்ளது.
இதில் பயிற்சி பெற்ற 85,053 பொறியியல் பட்டதாரிகள் பல் வேறு பணிகளுக்கு விண்ணப்பித் திருந்தனர். அதில், 65,034 மாண வர்கள் மிகச்சிறந்த இடங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர். இதனை கூறுவதில் அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன்.
அதேபோல, 861 கலை மற் றும் அறிவியல் கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டம் செயல் பாட்டில் இருந்தது. இந்த கல் லூரிகளில் திறன் பயிற்சி பெற்ற 99,230 மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு பணிகள் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதில், 83,223 மாணவர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
நான் முதல்வன் திட்டம் மூலமாக தனியாக வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப் பட்டன. இதன் மூலம், 5,844 பொறியியல் மாணவர்களுக்கும், 20,082 கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இது இந்த திட்டத்தின் மாபெரும் வெற்றி இது.
இந்த திட்டத்தின் ஓராண்டு வெற்றி இது. இந்த திட்டத்தினை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்த போது என் னுடைய வாழ்விலோர் பொன் னாள் என கூறி இருந்தேன். உண்மையிலேயே அது பொன் னாள் தான் என்று இந்த நாள் உறுதி செய்துள்ளது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.