திருநின்றவூர் – வேப்பம்பட்டில்….
திருநின்றவூர், செப். 2- ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் திருநின்றவூர் – வேப்பம்பட்டு பகுதி சார்பில் 29-08-2024 அன்று மாலை 6 மணிக்கு திருநின்றவூர் காந்தி சிலை அருகில் திருநின்றவூர் நகர தலைவர் அ.அருண் தலைமையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. முதலில் க.ஏ.தமிழ்முரசு அவர்களின் மந்திரமா- தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர் பா.இரா.கலைவேந்தன் வரவேற்புரையாற்ற, மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு, திருநின்றவூர் நகர கழக செயலாளர் கீதா ராமதுரை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் இராணி ரகுபதி, வேப்பம்பட்டு தலைவர் சிவ.இரவிச்சந்திரன்ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.ஆவடி மாவட்ட கழக காப்பாளர் பா.தென்னரசு, மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், மாநில அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றிய பின் மூடநம்பிக்கையால் ஏற்படும் அவலங்கள் பெண்ணுரிமை பாதுகாப்பு மற்றும் இந்திய அரசியல் சட்டம் 51 A(h) பிரிவு குறித்து கழக துணை பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் எழுச்சி உரையாற்றினார்.
நிகழ்வில் ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன், துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன்,மகளிரணி தலைவர் பூவை செல்வி, பெரியார் சுயமரியாதை இயக்க திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், ஆவடி மாவட்ட திராவிடர் கழக தொழிலாளர் அணி தலைவர் கி.ஏழுமலை, மாவட்ட இளைஞரணி செயலாளர் எ.கண்ணன், மாணவர் கழக செயலாளர் செ.பெ.தொண்டறம்,ஆவடி நகர தலைவர் கோ.முருகன், செயலாளர் தமிழ் மணி, துணைத் தலைவர் சி.வச்சிரவேல், திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ், செயலாளர் இரவீந்திரன், பட்டாபிராம் பகுதி தலைவர் வேல்முருகன், பூந்தமல்லி நகர தலைவர் பெரியார் மாணாக்கன், செயலாளர் தி.மணிமாறன், ஒன்றிய செயலாளர் சு.வெங்கடேசன், மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் அன்புச் செல்வி, ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயன், துணை தலைவர் ஜெயராமன், துணைசெயலாளர் சுந்தர்ராஜன்,உடுமலை வடிவேல், வை.கலையரசன்,பூவை லலிதா, பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின்
ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால், ஆவடி மதிவாணன், திருநின்றவூர் கு.சங்கரி, திருவேற்காடு சென்னகிருட்டிணன், முகப்பேர் முரளி, தாம்பரம் நகர கழக செயலாளர் சு.மோகன்ராஜ், தென் சென்னை மாவட்ட கழக துணை செயலாளர் அறிவு வழி காணொளி அரும்பாக்கம் சா.தாமோதரன், திருநின்றவூர் பிரேம் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இறுதியாக திருநின்றவூர் நகர திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் மா.சிலம்பரசன் நன்றி கூறினார்.
பெரம்பலூரில்…
பெரம்பலூர், செப். 2- பெரம்பலூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூட நம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பரப்புரை கூட்டமானது பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் சி.தங்கராசு தலைமையில் நேற்று (30.8.2024) பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் (திமுக), கழக பேச்சாளர் இராம.அன்பழகன், தலைமை கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன் ஆகியோர் கொட்டும் மழையிலும் கொள்கை சிதறாமல் சிறப்புரையாற்றினார்கள்.
இக்கூட்டத்தின் துவக்கமாக தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணி வித்து, பின்னர் நகரத் தலைவர் அக்ரி ந.ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார், அதனைத் தொடர்ந்து “மந்திரம் அல்ல தந்திரமே” என்கிற அறி வியல் கலை நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் கலைமாமணி மு.விச யேந்திரன் செய்து காட்டினார்.
அதனைத் தொடர்ந்து பெரம்ப லூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் பேசுகையில், இந்தக் கூட்டமானது மிகவும் முக்கியமானது என்றும், இந்த சுயமரியாதை இயக்கமானது கடந்த 100 ஆண்டுகளாக வலிமை பெற்று தற்போது அதனை வழிநடத்தி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்றும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் இந்த மூட நம்பிக்கை குறித்தும், பெண்ணுரிமை பாதுகாப்பு குறித்தும் நாம் பரப்புரை செய்ய வேண்டிய சூழலில் இருக்கின்றோம்.
ஏனென்றால் இந்த சாமியார்கள் எல்லாம் நம்மை முட்டாள்களாக்கி, மூடநம்பிக்கைக்கு அடிமையாக்கி எவ்வாறு ஏமாற்றுகின்றார்கள், அவ்வாறு கடவுள் பெயரை முன்னிறுத்தி ஏமாற்றுகின்றவர்களின் நிலை என்னவென்று இன்று பலரை உதாரணமாக பார்த்திருக்கிறோம்.
அதுமட்டுமல்லாமல், குறிப்பாக பெண்கள் தெய்வ பக்திக்கு ஆளாகி, மூடநம்பிக்கைக்கு அடிமையாகி பல சாமியார்களை நம்பி எண்ணற்ற இழப்புகளை சந்தித்துள்ளார்கள்,
எனவே இதுபோன்ற மூடநம்பிக்கைக்கு யாரும் அடிமையாகாதீர்கள் என்றும், இந்த மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டிய காலகட்டாயத்தில் நாம் இருக்கின்ற காரணத்தால் இந்த சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டையொட்டி நடந்து கொண்டிருக்கும் இந்த இந்நிகழ்வில் நாம் ஒன்று திரண்டு இருக்கிறோம்.
மேலும் பெண்ணுரிமை பாது காப்பு என்பது இந்த காலகட்டத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றுதான், அது குறித்து தந்தை பெரியார் வழிவந்த, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழிவந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்ணுரிமை பாதுகாப்பதையும், பெண்களுக்கான முக்கியத்துவம் அளிப்பதிலும், மூடநம்பிக்கை ஒழிப்பதிலும் கவனம் செலுத்தி மிகவும் ஓர் அருமையான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். எனவே இந்த பரப்புரைக் கூட்டத்தின் நோக்கமான மூடநம்பிக்கைக்கு யாரும் அடிமையாக வேண்டாம் எனவும், மூடநம்பிக்கைகளை ஒழித்து, பெண்ணுரிமைகளை பாதுகாக்க நாம் அனைவரும் உறுதி வேண்டும் எனவும் பேசினார்.
இக்கூட்டத்தில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், இ.தே.காங்கிரஸ் இளைஞர் அணி மா.செ. ராஜீவ் காந்தி, மாநில கட்டுப்பாட்டு குழு CPI ஞானசேகரன், மாவட்ட செயலாளர் CPI ஜெயராமன், மாவட்ட செயலாளர் CPI(M) ரமேசு, ம.தி.மு.க ஆலோசனை குழு உறுப்பினர் துரைராஜ், இந்திய தொழிலாளர் கட்சி மாநிலத் தலைவர் ஈசுவரன், BSP மாநில செயலாளர் காமராசு, வி.சி.க மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல், வி.சி.க வீர செங்கோலன் , முரசொலி (எ) சுப்பிரமணி, பெரியார் பெருந்தொண்டர் பொன்னுசாமி, திராவிடர் கழக இளைஞரணி மாவட்ட தலைவர் தமிழரசன், திராவிடர் கழக மாவட்ட மகளிர் அணி சூர்யகலா, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சின்னசாமி, பகுத்தறிவாளர் கழகம் (ஆத்தூர்) முருகானந்தம், மற்றும் திராவிடர் கழக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்யாறில்…
செய்யாறு, செப். 2- செய்யாறு நகரில் 27.08.2024 அன்று தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்புக்கு இணங்க சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மூடநம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51 A இவற்றை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பாக பொதுக்கூட்டம் வேல்சோ நெடுமாறன் தலைமையில் வடமணப்பாக்கம் வெங்கட்ராமன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்ட நிகழ்வில் மாவட்ட தலைவர் இளங்கோவன், நகர தலைவர் காமராசன், முன்னாள் மாவட்ட செயலாளர் நாகராசன், ஆரணி சுதா வாசுதேவன் ஆகியோரின் கருத்துரைக்குப் பிறகு கழக சொற்பொழிவாளர் முனைவர் காஞ்சி கதிரவன் கூட்டத்தின் நோக்கம் பற்றி ஒரு மணி நேரம் பேசினார்கள்.
சிறப்புரையாக கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் 60 மணித்துளிகள் மிகச் சிறப்பாக உரையாற்றினார். நிகழ்வின் இறுதியில் தங்கம் கே.பெருமாள் நன்றியுரை ஆற்றினார். கூட்டத்தில் ஆரணி அசோகன், வாசுதேவன், வெங்கட்ராமன் மற்றும் செய்யாறு கழகத் தோழர்கள் என்.கஜபதி சீனிவாசன் திராவிட மாணவர் கழகத்தை சார்ந்த வெங்கடேசன், ஆகாஷ், சிவக்குமார், உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியில் அனைவருக்கும் இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது. கூட்டத்தின் தொடக்கத்தில் தலைமை கழக அமைப்பாளர் பூ. எல்லப்பன் தொடக்க உரை நிகழ்த்தினார்்.