குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் அமைந்துள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் சிலைக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,
மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் ம.கு.வைகறை, மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, ப.க. துணைப் பொதுச் செயலாளர் மு.சு.கண்மணி மற்றும் கழக பொறுப்பாளர்கள் உள்ளனர்.
![குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில்.... [காரைக்குடி, 31.8.2024] திராவிடர் கழகம்](https://viduthalai.in/wp-content/uploads/2024/09/6-1024x285.jpg)
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அறிவுப் பெட்டகம் நூலினை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழங்கிட தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். l குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒளிப்பட கண்காட்சியினை கழகத் தலைவர் ஆசிரியர் மற்றும் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் பார்வையிட்டனர்.
![குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில்.... [காரைக்குடி, 31.8.2024] திராவிடர் கழகம்](https://viduthalai.in/wp-content/uploads/2024/09/8-1024x328.jpg)
காரைக்குடிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு புறவழிச்சாலையில் மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி தலைமையில் மாவட்ட தலைவர் ம.கு.வைகறை முன்னிலையில் ஏராளமான கழகத் தோழர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.. * தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களிடம் நீண்ட காலம் தனி செயலாளராக பணியாற்றிய செல்வராஜ் அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்பு செய்தார். l தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களிடம் நீண்ட காலமாக தனி செயலாளராக பணியாற்றி வரும் எழுத்தாளர் சிங்கார வடிவேலனுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்பு செய்தார்.
![குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில்.... [காரைக்குடி, 31.8.2024] திராவிடர் கழகம்](https://viduthalai.in/wp-content/uploads/2024/09/9-1024x424.jpg)
காரைக்குடியில் நடைபெற்ற தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் தோழமை இயக்க பொறுப்பாளர்கள், இலக்கிய அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர்.
