சென்னை, செப்.1- “சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் அடுத்த 4 மாதத்திற்கு தேவையான நீர் இருப்பு உள்ளது’ என்று நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னைக்கு குடிநீர்
சென்னை மாநகரத்தில் வசிப்பவர்களுக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை. செம்பரம்பாக்கம் மற் றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் நீர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப் பட்டு வருகிறது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி.யாகும். தற்போது 4.88 டி.எம்.சி.அதாவது 36 சதவீதம்
நீர் மட்டுமே இருப்பு உள்ளது. அதிகபட்சமாக 3.3 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2.4 டி.எம்.சி. நீர் அதா வது 73 சதவீதம் இருப்பு உள் ளது. அடுத்து 3.6 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட செம்ப ரம்பாக்கம் ஏரியில் 1.2 டி.எம்.சி. அதாவது 35.47 சதவீதம் மட் டுமே நீர் இருப்பு உள்ளது.
4 டி.எம்.சி. குறைவு
பூண்டி, சோழவரம் ஏரி களில் தலா 2.79 சதவீதமும்,6.11 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 60 சதவீத மும் நீர் இருக்கிறது. குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்தாலும், சென்னை மாந கருக்கு அடுத்த 4 மாதத்திற்கு தேவையான குடிநீர் இருப்பு உள்ளது. ஓரிரு மாதங்களில் பெய்யவிருக்கும் வடகிழக்கு பருவமழை மூலம் அடுத்த ஆண்டு கோடைக்கு தேவை யான நீரை ஏரிகளில் முடிந்த அளவு சேமிக்க திட்டம் உள் ளது.
இந்த மாத தொடக்கத்தில் பெய்தஓரளவு மழையால் நிலத் தடி நீர்மட்டமும் ஓரளவு உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் நிலத்தடி நீரை யும் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர வீராணம் ஏரியில் 49 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இதனால் தற்போதைய சூழ்நி லையில் தண்ணீர் தட்டுப்பா டுக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8.2 டி.எம்.சி. சராசரியாக கடந்த ஆண்டைவிட தற்போது 4 டி.எம்.சி.வரை குறைவாக இருக்கிறது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி
105 காலியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை,செப்.1- தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழகம் உதவி பொது மேலாளர், மேலாளர் உள்ளிட்ட 26 துறைகளில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 105 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி 30.8.2024 அன்று வெளியிட்டது. www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 28ஆம் தேதி கடைசி தேதி ஆகும்.
ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதனை அக்டோபர் மாதம் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம். எழுத்துத் தேர்வு நவம்பர் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் தாள் தேர்வு தமிழ்த் தகுதித் தாள், பொது அறிவு மற்றும் திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தேர்வாக நடைபெறுகிறது.
இந்த தேர்வு நவம்பர் 18ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். தமிழ் தகுதிதாள் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து பாடம் சார்ந்த தேர்வாக இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது.
இந்த தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே வெளியிடப்படும். முதல் தாள், இரண்டாம் தாள் எழுத்துத் தேர்வுக்கு 450 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும் என மொத்தம் 510 மதிப்பெண் வழங்கப்படும். கல்வி தகுதி, வயது உள்ளிட்ட முழு விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.