சென்னை, செப்.1- தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் 93 ஆயிரம் இளங் கலை பட்டப்படிப்பு இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. 19 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு உயர்கல்வித் துறை யின் கல்லூரி கல்வி இயக்ககத் தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், பி.எஸ்சி. பி.காம். பி.ஏ. என பல்வேறு பாடப்பிரிவுகளில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 729 இளங் கலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன.
இதற்கான, 2024-2025ஆம் கல்வி யாண்டு மாணவர் சேர்க்கை மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், மேனாள் ராணுவவீரர்களின் பிள்ளை களுக்கான சிறப்புப் பிரிவு கலந் தாய்வு கடந்த மே மாதம் 28ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி நடை பெற்றது.
அதன்பிறகு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் மாதம் 10ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை யில் நடைபெற்றது. 2ஆம் கட்ட கலந் தாய்வு ஜூன் மாதம் 24ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரையில் நடந்தது.
இந்த கலந்தாய்வு வாயிலாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பு இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை மாதம் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரு கின்றன.
93 ஆயிரம் இடங்கள்
சிறப்புப் பிரிவு, முதல் மற்றும் 2ஆவது சுற்று கலந்தாய்வு நிறை வில் மொத்தமுள்ள இடங்களில் 63 சதவீத இடங்களே நிரம்பியதாக தகவல்கள் வெளி யாகின. இதற்கிடையில் காலி யாக உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை பட்டப் படிப்புக்கு மாணவர் நேரடி கலந்தாய்வு வாயிலாக (வராண்டா அட்மிஷன்) நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்திருந்தார்.
அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை வாயிலாக மாணவர்கள் இளங்கலை படிப்புக்கு சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
முதல் கட்ட கலந்தாய்வு முடிந்து 2 மாதங்கள் நிறைவு அடைந்துள்ள நிலையில், 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் தற்போது வரை 93 ஆயிரத்து 700 இடங்கள் மட்டுமே நிரம்பி இருப்பதாக தகவல்கள் வெளி யாகி உள்ளன.
19 ஆயிரம் காலியிடங்கள்
அதேநேரம், மொத்தமுள்ள இடங்களில் கிட்டத்தட்ட 19 ஆயிரம் எண்ணிக்கையிலான இளங் கலை பட்டப்படிப்பு இடங்கள் காலியாக இருப்பதாக தகவல்கள் வெளி யாகி உள்ளது. 2023-2024ஆம் கல்வி யாண்டில், ஆகஸ்டு மாத முதல் வாரத்தில், அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் இடங்கள் வரை நிரம்பின. ஆனால், நடப் பாண்டு. 93. ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன.
நடப்பாண்டு பி.காம்., பி.ஏ., ஆகிய படிப்புகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்ந்ததாகவும், ஆனால், கணித பாடத்தில் மாணவர் சேர்க்கை வழக்கத்தை விட சற்று குறைந்திருப்பதாகவும் உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.