ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்ட முழக்கங்கள் (3.9.2024)
1. தந்தை பெரியார் வாழ்க!
2. அன்னை மணியம்மையார் வாழ்க!
3. தமிழர் தலைவர் வீரமணி வாழ்க!
4. தேசியக் கல்விக் கொள்கையா?
தனியார் கல்விக் கொள்ளையா?
5. திணிக்காதே திணிக்காதே
தேசியக் கல்விக் கொள்கை என்னும்
நஞ்சை திணிக்காதே! – திணிக்காதே!
6. பறிக்காதே பறிக்காதே
மாநில உரிமையைப் பறிக்காதே!
7. அடாவடியா? அடாவடியா?
ஒன்றிய அரசே அடாவடியா?
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய
நிதியைத் தடுத்து அடாவடியா?
8. மிரட்டலா? மிரட்டலா?
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க
தமிழ்நாட்டுக்கு மிரட்டலா?
9. பணயத் தொகையா? பணயத் தொகையா?
தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய
கல்வி நிதி பணயத் தொகையா?
10. நிராகரிக்கிறோம் நிராகரிக்கிறோம்
தேசியக் கல்விக் கொள்கையை
நிராகரிக்கிறோம்! நிராகரிக்கிறோம்!
11. தமிழ்நாட்டுக்குரிய பங்கைத்
தர மறுக்கும் ஒன்றிய அரசைக்
கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!
12. தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரால்
காவிக் கொள்கையைத் திணிப்பதா?
தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரால்
தனியார் மயத்தை வளர்ப்பதா?
தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரால்
சமூகநீதியைப் பறிப்பதா?
13. குலத் தொழில் செய்ய ஆசைகாட்டும்
விஸ்வகர்மா யோஜனா
பார்ப்பனியத்தை ஆள வைக்கும்
மனுதர்ம யோஜனா!
14. மூன்றாம் அய்ந்தாம் வகுப்புகளுக்குப்
பொதுத் தேர்வு கட்டாயமாம்!
பள்ளிக் கல்வியை முடித்த பின்னர்
குலத்தொழிலுக்குப் பட்டாவாம்!
15. தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரால்
ஆர்.எஸ்.எஸ்.சின் கல்விக் கொள்கை
என்ன சொல்லுது? என்ன சொல்லுது?
சமஸ்கிருதத்துக்குச் சிம்மாசனம்
தமிழ்மொழிக்கு அலட்சியமாம்!
சமூகநீதிக்குச் சவக்குழியாம்!
சனாதனம் பற்றிப் பாடங்களாம்!
தனியார் மயம் – தாராள மயம்
கல்விக் கூடமெல்லாம் காவி மயம்!
அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா
நவயோதாக்களுக்கு திறப்பு விழாவா
வானியல் இருந்த பாடத்திலே
ஜோதிடம் எல்லாம் இடம்பெறுமாம்!
வேதம், மந்திரம், பாராயணம்
மூடநம்பிக்கைகளுக்கு முடிசூட்டு!
இருபத்தியொன்றாம் நூற்றாண்டில்
இருபது நூற்றாண்டுகள் பின்னிழுப்பா?
தேவையில்லை தேவையில்லை
தேசியக் கல்விக் கொள்கை தேவையில்லை!
16. கொண்டுவா கொண்டு வா!
கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வா!
17. தூண்டாதே! தூண்டாதே!
மாணவர் போராட்டத்தைத் தூண்டாதே!
18. தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதா?
தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதா?
19. நிதி தரமறுக்கும் ஒன்றிய அரசுக்கு
வரியைக் கேட்க உரிமை உண்டா?
20. விடமாட்டோம்! விடமாட்டோம்!
தமிழ்நாட்டு மாணவர் உரிமைகள் எல்லாம்
பறிபோக விடமாட்டோம்! பறிபோக விடமாட்டோம்!
21. போராடுவோம் வெற்றி பெறுவோம்
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!