பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்
தென் சென்னை – மயிலாப்பூரில்…
மயிலை, செப். 1- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் ஏற்பாட்டில் 27.8.2024 அன்று மாலை 6.30 மணி அளவில் மயிலாப்பூர், அம்பேத்கர் பாலம் அருகில் “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்) விளக்கப் பொதுக்கூட்டம்” தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் தலைமையிலும், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந. மணிதுரை, இளைஞர் அணி துணைச் செயலாளர் மந்தைவெளி இரா. மாரிமுத்து, மாணவர் கழக மாநில அமைப்பாளர் வி. தங்கமணி மற்றும் மாவட்ட மகளிர் அணி தலைவர் வி. வளர்மதி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ் தொடக்க உரையாற்றியதற்குப் பின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன் மற்றும் மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர் பா. மணியம்மை ஆகியோர் விளக்க உரையாற்றினர்.
இறுதியாக திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மக்களிடம் மூடநம்பிக்கை மண்டிக் கிடப்பதையும், அதிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்றும், இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரசே, சட்டவிரோதமாக மூடநம்பிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கண்டித்தும், மதச்சார்பின்மைக்கு எதிராக அரசே! மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விளக்கியும், கண்டித்தும், தந்தை பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியை விளக்கிக் கூறியும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் கழகம் ஆற்றும் பணிகளைக் குறித்து விளக்கிக் கூறியும்’ சிறப்பானதொரு எழுச்சி உரையாற்றினார்.
முன்னதாக ‘கோபி இன்னிசை குழு’ வினரின் கழகக் கொள்கை விளக்க பாடல் களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் தென் சென்னை மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி நன்றி உரையாற்றினார்.
திராவிடர் கழகம் தோன்றிய நாளான அன்றைய நாளில், திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் வி.தங்கமணியின் பிறந்தநாளை முன்னிட்டு மேடையில் ‘கேக்’ வெட்டி கொண்டாடப்பட்டது. வி. தங்கமணிக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பாராட்டு தெரிவித்தார்.
சோழிங்கநல்லூர் மாவட்ட கழகக் காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் துரை.அருண், துணைத் தலைவர் ச.மகேந்திரன், தென் சென்னை மாவட்ட கழக மகளிர் அணி செயலாளர் பி.அஜந்தா, மயிலாப்பூர் ஈ.குமார், ச.மாரியப்பன், பா.இராஜேந்திரன்(எம்.டி.சி), சு.செல்வம்(எம்.டி.சி), எம்.ஜி.ஆர். நகர் கரு. அண்ணாமலை, மு.பசும்பொன் (சுயமரியாதை திருமண நிலையம்), வை.கலையரசன், க.கலைமணி, வடசென்னை மாவட்ட கொடுங்கையூர் பகுதி பொறுப்பாளர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், குன்றத்தூர் மு.திருமலை, ஜே.சொப்பன சுந்தரி, மாவட்ட மாணவர் கழக பொறுப்பாளர் வி.யாழ் ஒளி, வடசென்னை க.செல்லப்பன், க.துரை, கோ.செல்வராஜ், மணிமொழியன், ந. கோபி, ச.சென்ன கிருஷ்ணன், ஆர்.ஜெயசங்கரி, வி.சகானப்பிரியா, வி.நிலா, கோ.ஜஸ்வந்த், கோ.அன்புமணி, கோ.இராகவி, அய்ஸ் அவுஸ் உதயா மற்றும் பொதுமக்கள் ஏராளமாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில்…
திருவாரூர், செப். 1- திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில் 23.8.2024 அன்று மாலை 6 மணிக்கு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் நகர தலைவர் கா.சிவராமன் தலைமை தாங்கி உரையாற்றினார்.
தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் க.முனியாண்டி, திமுக கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர் (எ) கலியபெருமாள், கிளை செயலாளர் கோவி.சந்துரு, ஆகியோர் முன்னிலையில் கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் தமது உரையில், இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) பிரிவு சொல்லுவது போன்று மக்களிடையே அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், மற்றும் விசாரணை மற்றும் சீர்திருத்த உணர்வு ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலும், தந்தை பெரியார் அவர்களின் மூட நம்பிக்கைகள் இல்லா சமூகம் உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் அந்த அடிப்படையிலும் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்று உரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் குடவாசல் ஒன்றிய தலைவர் ந.ஜெயராமன், ஒன்றிய செயலாளர் க.அசோக்ராஜ், ஒன்றிய துணைத் தலைவர் சி.அம்பேத்கர், மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர் க.வீரையன், மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், இளவான்குடி கணேசன், ஜெயராமன், திராவிடமணி, மற்றும் பலர் பங்கு பெற்றனர். கூட்ட துவக்கத்தில் மாவட்ட தொழிலாளரணி செயலாளர் இரா.நேரு வரவேற்பு உரையாற்றினார். மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ நன்றி கூறினார்.
தூத்துக்குடி – சிவகளையில்…
தூத்துக்குடி, செப். 1 தூத்துக்குடி மாவட்டம் சிவ களையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டியொட்டித் திராவிடர் கழகம் நடத்தி வருகின்ற மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கப் பரப்புரைப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
22.08.2024 அன்று மாலை 6மணியளவில், சிவகளை அரிசி ஆலை அருகில் மாவட்டக் கழகக் காப்பாளர் மா.பால்ராசேந்திரம் தலைமையில், காப்பாளர் சு.காசி, மாவட்டத் தலைவர் மு. முனியசாமி, மாவட்டச் செயலாளர் கோ.முருகன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் தொடங்கியது.
நீதிக்கட்சியின் மக்கள் நலப் பணிகள், சுயமரியாதை இயக் கமும்,தந்தை பெரியாரும் செய்த திராவிடர் இனநலப் பணிகள், தமிழர் தலைவர் ஆசிரியர் பார்ப்பனரின் இடையூறுகளை ஒழித்துக்கட்டி, தமிழின உயர்வுக்கு ஆற்றிவரும் அரும்பணிகள் பற்றிய விரிவான தலைமையுரைக்கும் பின் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். இறுதியாக, கழகச் சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு மூடநம்பிக்கையால் வாழ்க்கையில் ஏற்படும் நட்டங்கள் பற்றியும், பெண்கள் முன்னேற்றம், அவர்களின் கல்வி உரிமை, ஆணாதிக்க ஒழிப்பு என்பனவெல் -லாம் தந்தை பெரியாரால் சாத்தியமானவையே என்றும், இந்திய அரசியல் சட்டம் குறிப்பிடும் பிரிவின்படியே கழகத்தின் செயல்பாடு நடந்துவருவதோடு, சட்டத்திற்குரிய பாதுகாப்பினையும் கழகமே கொடுத்து வருகிறதென்றும் தனது சிறப்புரையாக வழங்கினார். மாங்கொட்டாபுரம் கழகத் தோழர் சி. முருகராசா நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ச. வெங்கட்ராமன், மாவட்டச் செயலாளர் சொ. பொன்ராஜ், மாவட்டத் துணைத்தலைவர் த.செல்வராஜ், தூத்துக்குடி மாநகர கழகச் செயலாளர் செ.செல்லத்துரை, கி.கோபால்சாமி, பெரியார் மய்யக் காப்பாளர் பொ.போஸ், சிவகளை தோழர்கள் ஆ.முருகன், மூ.கார்த்தீசன், ப. வள்ளிநாயகம், பராக்கிரம் -பாண்டி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்திற்கான செலவு ரூ. 7740
நன்கொடையாளர் வரவு ரூ. 4700
அதிகப்படியான செலவு ரூ. 3040
தருபவர்: மா.பால்ராசேந்திரம்
உசிலம்பட்டியில்…
உசிலம்பட்டி கழக மாவட்டத்தின் சார்பில் உசிலம்பட்டி நகரத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, பெண்ணுரிமை பாதுகாப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, 51A(h) சட்ட விளக்க பொதுக்கூட்டம் பொதுக்குழு உறுப்பினர் அ. மன்னர்மன்னன் தலைமையில் நடைபெற்றது. உசிலம்பட்டி கழக மாவட்ட தலைவர், பா.முத்துக்கருப்பன் உசிலம்பட்டி மாவட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலையேற்றனர். தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம் கருத்துரையாற்றினார். பேரையூர் நகர தலைவர் பாண்டியராஜன் நன்றி கூறினார். கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.