டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இரண்டு மில்லியன் இளைஞர்களை அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை கொண்டு எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதற்கு கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட் டோருக்கு 43 விழுக்காடு இட ஒதுக்கீடு தர முயற்சி எடுக்கப்படும். புதிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திடவும் முடிவு, முதலமைச்சர் ரேவந்த் தகவல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 3 நாள் பயணமாக செப்.8இல் அமெரிக்கா செல்கிறார் ராகுல்: பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
*அசாம் மாநிலத்தில் முஸ்லிம் சட்டமன்ற உறுப் பினர்கள் தொழுகை நடத்துவதற்கு இரண்டு மணி நேர வெள்ளிக்கிழமை விடுமுறையை நிறுத்து வதற்கான மாநில சட்டமன்றத்தின் முடிவை பாஜகவின் கூட்டணி கட்சிகளான நிதிஷ் குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன் சக்தி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
* பிரதமர் நரேந்திர மோடியின் அடிக்கடி பன்னாட்டு பயணங்கள் அவர் ஒரு பெரிய தேசத்தின் தலைவர் என்பதைக் காட்டிலும் “டிரேபீஸ் ஆர்ட்டிஸ்ட்” (கழைக் கூத்தாடி) என்று சித்தரிக்க கூடும் என மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி கடும் விமர்சனம்.
தி டெலிகிராப்:
*ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் மேலும் இரு தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகல். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் சர்மாவை களமிறக்கியதற்கு எதிராக நூற்றுக்கணக்கான பாஜகவினர் பேரணி நடத்தினர்.
– குடந்தை கருணா