திருவெறும்பூர், ஆக. 31- திருச்சி மாவட்ட மேனாள் இளைஞரணி செயலாளரும், பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், திருச்சி மாவட்ட கழகத் தலை வர் ஞா.ஆரோக்கியராஜ் மைத்து னருமான சு.இளங்கோவன் (65) அவர்கள், உடல்நலமின்றி 25.08.2024 அன்று இயற்கை எய்தினார்.
இயக்கத்தின் மீது, தமிழர் தலைவர் ஆசிரியர் மீதும் பெரும் பற்றும், நம்பிக்கையும் கொண்டவர். மாவட்டத்தின் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தவறாமல் வருகை தருபவர்.
இருசக்கர வாகனம் பயன்படுத்தாத நிலையில், பேருந்துகள் பல மாறியும் உரிய நேரத்திற்குக் கூட்டத்திற்கு வந்து, இறுதிவரை பங்களிப்பைச் செலுத் துவார். திரும்பும் போது தோழர்கள் பலர் இருந்தாலும் யாருக்கும் சிரமம் கொடுக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் நடந்தும், பேருந்திலும் பயணம் செய்பவர்.
ஆழ்ந்த புத்தக வாசிப்பாளர். தவிர அவைகளை ஆவணப்படுத்துவதில் திறன் படைத்தவர். நமது பேச் சாளர்கள் கூட சில புள்ளி விவ ரங்கள், சில ஆதாரங்களை இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவதுண்டு. யாருக்கும் எந்த உதவியும் செய்பவர். நிறைகுடம் தளும்பாது என்பதற்கேற்ப அமைதியே உருவாக, எங்கும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் இயங்கியவர்.
இவரின் தந்தையார் ஆசிரியர் சுந்தரேசன் திருவாரூர் மாவட்டம் கீழ்வேளூரில் பணியாற்றியவர். தந்தை பெரியார் தன்மானப் பேரவையில் பணியாற்றியவர். இளங்கோவன் அவர்களுக்கு 2 சகோதரர்கள். அனைவருமே பெரியார் கொள்கையைப் பின்பற்றி, இயக்கத்தில் செயலாற்றி வருபவர்கள்.
சு.இளங்கோவன் அவர்களின் இறப்புச் செய்தி அறிந்து பெல் நிறுவனத்தில் இருந்து ஏராள மான ஊழியர்கள், பல்வேறு அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அன்றைய தினம் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்குத் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பெருஞ்சித்திரனார் மகன் பொழிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் திருச்சி பெரியார் கல்வி வளாக ஒருங்கிணைப்பாளர் தங்காத்தாள், மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை, மாநிலத் தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், மாநில அமைப்பாளர் ம.ஆல்பர்ட், துறையூர் மாவட்டத் தலைவர் மணிவண்ணன், திருச்சி மாவட்டச் செயலாளர் இரா.மோகன்தாஸ், நகரத் தலைவர் துரைசாமி, செயலாளர் இராமதாஸ், இலால்குடி மாவட்டச் செயலாளர் அங்கமுத்து, பெல் ஆறுமுகம், பெல் தி.தொ.க தலைவர் அசோக்குமார், செயலாளர் ஆன்டிராஜ், செ.பா.செல்வம், பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அம்பிகா, ரெஜினா, சாந்தி, ரூபியா, வசந்தி, சங்கீதா, காட்டூர் நகரத் தலைவர் அ.காமராஜ், செயலாளர் சங்கிலிமுத்து, மாநகர அமைப்பாளர் சி. கனகராஜ், காட்டூர் பாலசுப்பிரமணியன், சு.அறிவழகன், விழக்குடி அறிவொளி, கக்கரை இராமமூர்த்தி, பேபி ராமதாஸ், வீ.அன்புராஜா, ஆசிரியர் செல்வி, மண்ணச்சநல்லூர் இரவிச்சந்திரன், திருவரங்கம் கழகச் செயலாளர் இரா.முருகன், பாச்சூர் அசோகன், ஆ.அறிவுச்சுடர், மாவட்ட இளை ஞரணி செயலாளர் சு.மகாமணி, அமைப்பாளர் சு.இராஜசேகர், தில்லை நகர் துணைத் தலைவர் பிரவீன்குமார், திருவரங்கம் அண்ணாதுரை, பகுத்தறிவாளர் கழகம் பென்னி, பா.லெ.மதிவாணன், மலர்மண்ணன், குத்புதீன், கல்பாக்கம் இராமச்சந்திரன், பேராசிரியர் சூசை, முனைவர் தி.நெடுஞ்செழியன், சு.செயலாவதி, தமிழ்க் காவிரி தமிழகன், தலைமையாசிரியர் விஜயலட்சுமி, ஆசிரியர் மல்லிகா, காப்பாளர் மு.நற்குணம், சோமரசம்பேட்டை இளைஞரணி தலைவர் அறிவுச்சுடர், தமிழ்ச்செல்வன், செந்தாமரை, செந்தமிழினியன், விடுதலை கிருஷ் ணன், ஞான.ஜோதி, ஜீவ.ஜோதி, திருவெறும்பூர் நகரத் தலைவர் சிவானந்தம், நவமணி காட்டூர், புகைப்படக் கலைஞர் பாண்டியன், வழக்குரைஞர் ரிஸ்வான், கண்ணன், பி.பூபதி, மணியன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.