வேளாண் தொழிலை தொடங்கினால் ரூபாய் ஒரு லட்சம் மானியம்-தமிழ்நாடு அரசு
சென்னை, ஆக. 31- தமிழ்நாட்டில் வேளாண் சார்ந்த தொழிலை பட்டதாரி இளைஞர்கள் தொடங்கினால் அவர்களுக்கு வங்கிக்கடனுடன் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளதாக வேளாண் உற்பத்தி துறை ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் அபூர்வா கூறினார்.
வரும் தலைமுறையினருக்கு விவசாயத்தின் மீது ஆர்வத்தை அதிகரிக்கவும், விவசாயத்தை மேம்படுத்தவும் பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக மாற்றும் நோக்கத்தில் அரசு மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழிலை தொடங்கினால் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்த ஆண்டில் 100 இளைஞர் களுக்கு வங்கிக்கடனுடன், தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை சார்பில் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக வேளாண் உற்பத்தி துறை ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் அபூர்வா கூறினார்.
இதுபற்றி அவர் மேலும் கூறு கையில், வேளாண் பட்டதாரி மட்டு மல்லாமல், எந்த பட்டதாரியாக இருந்தாலும் விவசாயம் சார்ந்த தொழிலை கொண்டு இருந்தால் அவர் மானியம் பெற தகுதி பெறு வார்கள். அவர் வேளாண் சார்ந்த தொழிலை தொடங்க வேளாண் உட் கட்டமைப்பு நிதியில் விரிவான திட்ட அறிக்கையை கொடுக்க வேண்டும். அதன்படி முறையாக விண்ணப்பித்தால், இளைஞர்களுக்கு வங்கியில் இருந்து கடன் பெற உதவி செய்து 3 சதவீத வட்டி மானியம் பெறவும் உதவி செய்யப்படும்.
இதுதவிர அவர் தொடங்க போகும் தொழிலை பரிசீலித்து ரூ.1 லட்சம் மானியமும் அர சால் வழங்கப்படும். வேளாண் சார்ந்த தொழிலை தொடங்க விரும்புபவர்கள் தங்கள் மாவட் டங்களில் உள்ள விவசாயத்துறை இணை இயக்குநரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாய அதிகாரிகளை கொண்ட குழு இதை பரிசீலித்து தகுதியுள்ளவர்களின் பட்டியலை அரசுக்கு அனுப்பி வைக்கும். அரசின் வேளாண்மைத்துறை அந்த விண்ணப்பப் பட்டியலை பரிசீலித்து அவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கும். இந்த ஆண்டிற்கு 100 பட்டதாரிகளுக்கு ஒரு லட்சம் ரூபாயை அரசு தரப்போகிறது.
-இவ்வாறு அபூர்வா கூறினார்.