சேலம், ஆக.31- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (31.8.2024) வினாடிக்கு 5,349 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,396 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,349 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,396 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 13,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 116.02 அடியிலிருந்து 115.56 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 86.56 டிஎம்சியாக உள்ளது.