30.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
< அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சான் பிரான்சிஸ்கோவில் தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்திட வலியுறுத்தி உள்ளார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
< நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் கிரிதாரி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
< பிரிட்டிஷார் ஆட்சியைவிட மோடி ஆட்சியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெரும் பணக்காரர்கள் மட்டுமே வளர்ந்து வருகிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தாக்கு.
< பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< இளைஞர்கள் மனதில், ‘தோல்வியையும் வெற்றியையும் ஏற்றுக்கொள்’ என்ற முழக்கத்துடன், ‘பாரத் டோஜோ யாத்ரா’ நடத்த ராகுல் திட்டம்!
தி ஹிந்து:
< கருநாடக அரசு வழங்கிய எஸ்.சி., எஸ்.டி. ஜாதிச் சான்றிதழ்களின் அடிப்படையில் 1978 முதல் 1987 வரை அரசு, பொதுத்துறையில் சேர்ந்தோரின் பணி நியமனம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
2001-க்குப் பிறகு சேர்ந்தோரின் ஜாதி சான்றிதழ் செல்லாது என அறிவிப்பு.
தி டெலிகிராப்:
< அரசமைப்பு நிபுணரும், சிறந்த எழுத்தாளரும், சட்ட வல்லுநருமான ஏ.ஜி.நூரானி தனது 94ஆவது வயதில் காலமானார்
டைம்ஸ் ஆப் இந்தியா:
< ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எதிர்க்கட்சிகளின் இடைவிடாத வற்புறுத்தலின் காரணமாக, அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை, குழுவில் விவாதிக்க வேண்டும் என்ற உறுப்பினர்களின் வலுவான கோரிக்கையை தொடர்ந்து, ஓபிசி நலனுக்கான நாடாளுமன்றக் குழு தனது நிகழ்ச்சி நிரலில் சேர்த்தது.
< பட்டியல் ஜாதியினர் (எஸ்சி) / பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் பொதுமக்களிடம் உள்ள வளர்ச்சி வேறுபாடுகளை நிவர்த்தி செய்ய தமிழ்நாடு அரசு அமைத்துள்ள எஸ்சி/எஸ்டிகளுக்கான தமிழ்நாடு மேம்பாட்டு செயல் திட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில கவுன்சில் அமைக்கவும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண் காணிப்பு குழுக்களை உருவாக்கவும் வழி வகுத்து, முழு செயல்முறைக்கும் சட்ட அடிப்படையை வழங்குகிறது.
– குடந்தை கருணா