கலைவாணர் நினைவுநாள் [30.08.1957]
1950 இல் பாரிஜாதம் என்ற படம் வெளிவந்தது.
மிகவும் புனிதமான பூவான பார்ஜாதத்தை முன்வைத்து பாமா ருக்மணி இடையே நாரதர் கலகம் மூட்டிவிடுவதுதான் இந்தப் பாரிஜாதக் கதை
இதில் வரும் ஒரு பாடலை என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் இணைந்து பாரிஜாதம் பாடலைப் பாடினர். புனிதமான பவித்திரமான கடவுளே விரும்பும் பாரிஜாதத்தைவிட மக்கள் பசி போக்கும் நெல் மேலானது என்ற அந்தப் பாடல் அன்று அனைவராலும் ரசிக்கப்பட்டது.
பாரிஜாத பூவு நம்ம
பசிதனை தீர்த்திடுமா – இதை
பக்குவமா பாதுகாத்தா
பட்டினி வந்திடுமா… சொல்லு… (பாரிஜாத)
நாட்டுக்கு தேவையான நெல்மரம் – கொண்டு வந்த
நம்பியை சுத்தி வந்து கும்மியடிப்போம்
கூட்டமாக உழைத்து வாட்டமில்லாமல் இன்பம்
கூடவே பாட்டு பாடி கும்மியடிப்போம்…
நம்ம நாட்டுக்கு தேவையான நெல்மரம் – கொண்டு வந்த
நம்பியை சுத்தி வந்து கும்மியடிப்போம்
ஏரை எடுத்து பூமி உழக போறேன் பொண்ணே
கொஞ்சம் நேரம் பொறுத்தே
கஞ்சியும் கொண்டே வாரேன் மச்சான்
உழுது வெதச்சு தண்ணியும்
பாய்ச்சி காவலும் இருப்பேன்
பக்கம் உக்காந்து கிட்டு
வெத்தலை மடிச்சு வாயில கொடுப்பேன்
– இப்படி ஆணும், பெண்ணும் உழவுக்கு என்னென்ன செய்வோம் என்பதை பட்டியலிட்டு கடைசியில்,
பட்டினியுள்ள குடும்பங்களுக்கு
பகிர்ந்து கொடுப்பேன்…
சோத்து பஞ்சம் வராம செஞ்சுட்டே
யோசனை சரிதான் மச்சான்…
என்று முடியும்.
தெய்வீகத்தன்மை கொண்டது என்று நம்பப்படும் பாரிஜாதத்தால் எந்தப் பயனும் இல்லை, மக்கள் பசி போக்கும் உழவும் தொழிலும்தான் உன்னதமானது என்பதை இந்தப் பாடலில் கலைவாணர் எடுத்துரைத்திருப்பார்.
பக்திப் படம் ஒன்றில் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல பகுத்தறிவு விதைகளை நகைச்சுவையாய் விதைத்திருப்பார் கலைவாணர்.
இப்போது இது போல் ஒரு பாடல் பக்திப் படங்களில் வருமானால் சங்கிக்கூட்டங்கள் திரையரங்கு முன்பு காவிக்கொடியை தூக்கிக் கொண்டு போய் ஹிந்துக்களின் மனதை புண்படுத்துகின்றனர் என்று கூக்குரலிடுவார்கள்.