சண்டிகர், ஆக.30 அரியானா மாநில சட்ட மன்றத் தேர்தலில் ஆளும் பாஜக வெறும் 20 முதல் 29 இடங்களை மட்டுமே பெற்று பெரும் தோல்வியைத் தழுவப் போகிறது; காங்கிரஸ் கட்சி 58 முதல் 65 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றும் என்கிறது Lok Poll கருத்துக் கணிப்பு. இந்த கருத்துக் கணிப்பு ஆளும் பாஜகவுக்கு பெரும் கலக்கத்தையும் எதிர்க்கட்சியான காங்கிர சுக்கு பெரும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.
அரியானாவில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும் பான்மைக்குத் தேவை 46 தொகுதிகள். அரியானாவில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது.
அரியானாவின் 90 சட்டமன்றத் தொகுதி களுக்கும் அக்டோபர் 1-ஆம் தேதி ஒரே கட்ட மாக வாக்குப் பதிவு நடை பெறுகிறது. அக்டோபர் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
2019-ஆம் ஆண்டு அரியானா சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக் கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களைப் பெற்ற பாஜக வுடன் 10 இடங்களில் வென்ற ஜன நாயக் ஜனதா கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. நான் கரை ஆண்டுகால கூட்டணி ஆட்சியில் இருந்து கடந்த மார்ச் மாதம் ஜனநாயக் ஜனதா கட்சி வெளியேறியது. அத்துடன் அக்கட்சியின் 10 சட்டமன்ற உறுப்பினர்களில் 7 பேர் பதவி விலகிவிட்டு பாஜக, காங்கிரஸில் இணைந்து விட்டனர்.
தற்போதைய தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக் ஜனதா கட்சி- ஆசாத் கட்சி கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக வுக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அரியானா சட்டமன்றத் தேர்தல் தொடர்பான Lok Poll கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அரியானா சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மொத்தம் 67,500 பேரிடம் Lok Poll நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியது. இதன் முடிவுகள்:
பாஜக 20 முதல் 29 இடங்கள் (35%- 37% வாக்குகள்)
காங்கிரஸ் 58 முதல் 65 இடங்கள் (46%-48% வாக்குகள்)
இதர கட்சிகள் -3 முதல் 5 இடங்கள் (7% முதல் 8% வாக்குகள்)
எந்த முடிவையும் எடுக்காதவர்கள்- 9%
லோக்போல் சர்வே முடிவுகள் அரியானாவில் ஆளும் பாஜகவுக்கு பேரதிர்ச்சியையும் காங்கிரசுக்கு பெரும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.