வடகிழக்குப் பருவ மழை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்

2 Min Read

அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு

சென்னை, ஆக.30- வடகிழக்கு பருவமழை காலத்தில் தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென் னரசு மின்சார வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ் நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலத்தில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை யின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப் புகள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் மற் றும் அதனை செயல் படுத்து தல் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் காணொலிக் காட்சி மூலம் அமைச்சர் தங்கம் தென்னரசு அனைத்து தலைமை பொறியா ளர்களுடன் கலந்துரையா டினார். கூட்டத்தில் நடப்பு ஆண்டுக்குள் முடிக்கப் பட வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுவரை, அறிவிக்கப் பட்ட 108 அறிவிப்புகளில், லட்சம் இலவச விவசாய மின் சார இணைப்புகள் வழங்குதல், 3 புதிய மின்சார பகிர் மான மண்டலங்கள் அமைத்தல் உள்ளிட்ட 28 முக்கிய அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு உள்ளன.

இதுதவிர 78 அறிவிப்பு களுக்குகான பணிகள் பல்வேறு நிலைகளில் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர், பணிகளுக்கு தேவையான தளவாட பொருட்கள் மற்றும் மின்சார சாதனங்களை விரைந்து கொள்முதல் செய்து, பணிகளை விரைந்து முடித்து குறித்த காலத்திற்குள் செயல் பாட்டுக்குகொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

வடகிழக்கு
பருவமழை

வருகிற வடகிழக்கு பருவ மழை காலத்தில் தடையில்லா சீரான மின் சாரம் வழங்க வேண்டும். இதற்காக கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் ஒருங்கிணைந்த பராமரிப்புப் பணிகள் தமிழ்நாடு முழுவ தும் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

தற்போதைய நிலவரப் படி, 31 ஆயிரத்து 328 பழுதடைந்த மின்கம் பங்கள் புதிதாக மாற்றப் பட்டுள்ளன.
பராமரிப்பு பணிகளுக் காக திட்டமிடப்பட்ட மின்சார நிறுத்தங்களின் போது, ஆங்காங்கே மின் தடை ஏற்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்ட, அமைச்சர், மின்சார நிறுத்த நேரம் குறித்து மின்சார நுகர் வோர் களுக்கு முன்னரே குறுந்தகவல் மூலமும், பத்திரிக்கை செய்தி வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *