பாலியல் தொல்லை தந்ததாகக் கேரள நடிகைகள் வாக்குமூலம். நடிகர்கள்மீது வழக்குப் பதிவு. தமிழ்த் திரையுலகில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்ற நடிகர் சங்க செயலாளர் விஷால் அறிவிப்பு!
மழை அறிவிப்பு
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது என்றும், சென்னையில் இரண்டு நாள்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மய்யம் அறிவித்துள்ளது.
வருந்துகிறோம்!
ஏழுமலையான் காப்பாற்றவில்லையே
கார் மோதி பக்தர்கள் நான்கு பேர் பலி
அய்தராபாத்,ஆக.30 தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தைச் சேர்ந்த வர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குக் காரில் சென்றனர். தரிசனத்தை முடித்துவிட்டு அதே காரில் அய்தராபாத் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் விரைந்தனர். மக பூப்நகர் அருகே அதிகாலையில் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை அந்த கார் திடீரென இழந்தது. இதனால் நிலை தடுமாறி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் மோதி நொறுங்கியது. இவ்விபத்தில் காரில் பய ணித்த 4 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அறிவிப்பு!
Leave a Comment