இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களாகவே இருக்கின்றன, மெட்ரோ ரயில் திட்டங்கள். ஆனால், 2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இதுவரை மத்திய அரசுத் தரப்பிலிருந்து எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இது தொடர்பாக மக்களவையில் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு, “சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்டப் பணிகள் தற்போதைக்கு மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்தப்படுகிறது.
எனவே, அதற்கான செலவுகளைத் தமிழ்நாடு அரசே செய்கிறது” என்ற அதிர்ச்சி பதிலைத் தந்திருக்கிறார் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையமைச்சர் தோகன் சாஹு. கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை மெட்ரோவுக்கு ஒரு பைசாகூட வழங்காத மத்திய அரசு, பல மாநில மெட்ரோ பணிகளுக்கும் கோடிகளைக் கொட்டியிருக்கிறது. 2022-23, 2023-24 நிதியாண்டுகளில், நகரவாரியாக மத்திய அரசு மெட்ரோ பணிகளுக்கு ஒதுக்கிய நிதி குறித்த தரவுகள் இங்கே….