அப்படித்தானே?
*சமூக ஊடகத்தில் தேச விரோத தகவலை பதிவிட்டால், ஆயுள் தண்டனை!
– உ.பி. அரசு அறிவிப்பு
>> சிறுபான்மையினரின் உரிமைக் குரல்தான் உ.பி.யில் தேச விரோதம் – அப்படித்தானே?
தொழில் போட்டியா?
*சமூஅறநிலையத் துறை இந்து மதப் பிரச்சாரம் செய்ய அல்ல என்கிறார் கி.வீரமணி.
– இந்து மதத்தை அழிக்கத்தான் அறநிலையத் துறை என்று நினைச்சிட்டாரோ – ‘தமிழ் இந்து’
>> இந்து மதத்தைப் பிரச்சாரம் செய்யத்தான் நாங்கள் இருக்கிறோமே; இதில் அறநிலையத் துறை வேறு போட்டிக்கு வரவேண்டுமோ என்று தொழில் போட்டி பிரச்சினையா தமிழ் இந்து ஏட்டுக்கு?
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment