இடம்பெயரத் தெரியா பறவைகளுக்கு உதவுகிறார்கள் மனிதர்கள் விமானம் மூலம்.
ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் அரிய வகைப் பறவைகளுக்கு எப்படி இடம்பெயர்வது என்று கற்றுக்கொடுக்கப்படுகிறது.
மனிதர்கள் சிறிய விமானத்தைப் பயன்படுத்திப் பறவைகளுக்கு வழிகாட்டுகின்றனர்.
பேட்டர்ஸெல் (Paterzell) நகரில் உள்ள திடலில் நார்த்தன் பால்ட் அய்பிஸ் எனும் அரிய வகைப் பறவைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒரு சிறிய விமானம் புறப்பட்டதும் அதனைப் பறவைகள் பின்தொடர்கின்றன.
ஆஸ்திரியாவில் உள்ள ஆராய்ச்சிக் குழு பயிற்சியை அளிக்கிறது.
கிட்டத்தட்ட 300 பறவைகளுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது.
ஆரம்பத்தில் பறவைகள் சுயமாகப் பறந்து சென்றுவிடும் என்று ஆய்வாளர்கள் எண்ணினர்.
ஆனால் எங்குச் செல்வது என்று தெரியாமல் அவை தவறான திசையில் பறந்து சென்று இறந்துவிட்டன.
அதனால் பறவைகளுக்கு விமானத்தைப் பின்தொடர்வதற்குப் பயிற்சி தரப்பட்டது.
பறவைகள் மனிதர்களை அவற்றின் தாய் என்று நினைத்துக்கொண்டு பின்தொடர்கின்றன.
ஒரு காலத்தில் மத்திய அய்ரோப்பாவில் அந்த அரிய வகைப் பறவைகள் வாழ்ந்தன.
வேட்டைக்கு இரையானதால் 17ஆம் நூற்றாண்டில் அவை அழிந்துவிட்டன.
அந்தப் பறவைகளை மீண்டும் அங்குக் கொண்டுசெல்ல உலகம் முழுதும் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
பறவையைக் கண்டான் விமானம் செய்தான். இப்போது பறவை விமானத்தைத் தொடர்கிறது.