நிலக்கோட்டை, ஆக. 28- திண்டுக் கல் மாவட்டம், சின்னாளபட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் சங்க பலகை, கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று (27.8.2024) நடந்தது.
இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் விக்கிரமராஜா அளித்த பேட்டியில்,
“உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகளை மாற்ற வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் என சொல்லி ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் அகற்றவில்லை.
எத்தனை ஆண்டுகளில் அகற்றப் படும் என்பதை மக்களுக்கு வெளிப் படையாக அறிவிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் டில்லியை நோக்கி முற்றுகைப் போராட்டத்தை கையில் எடுப்போம்.
சுங்கச்சாவடிகளை கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒன்றிய அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம்” என்றார்.