தமிழ்நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை திராவிட மாடல்அரசு நிர்ணயித்து, அதற்கான பணிகளை முனைப்பாகவும், சிறப்பாகவும் மேற்கொண்டு வருகிறது. அந்த முனைப்பின் தொடர்ச்சியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 27.8.2024 இரவு அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதையொட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், “தங்களின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று உள்ளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதலமைச்சருக்கு தனது வாழ்த்துகளை கூறினார்.
தங்களின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

Leave a Comment