சென்னை, ஆக.28- உயில் எழுது வதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன? உயிலை ரத்து செய்ய முடியுமா? எத்தனை முறை ரத்து செய்யலாம்?
உயில்களில் திருத்தம் செய்ய லாமா? இதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
உயில் எழுதுவதென்பது, ஒரு வரின் அடிப்படை உரிமையாகவும், அவரது கடைசி ஆசையாகவும் கருதப்படுகிறது. உயில் எழுதியதுமே, நம்பிக்கைக்குரிய 2 பேரிடம், இது குறித்து தெரிவிப்பது நல்லது.. இதனால், உரியவர்களிடம் உரிய நேரத்தில் உயில் வந்து சேரும்.
சொத்துக்கள்: 18 வயது நிரம்பிய வர்கள் யாராக இருந்தாலும், தங்க ளுடைய சொத்துகளை உயிலாக எழுத முடியும். ஆனால், ஒருசில காரணங்களின்போது மட்டும் 21 வயது நிரம்பியவர்தான் உயில் எழுத முடியும்..
உயிலை எழுதியதுமே, அதை பதிவு செய்ய வேண்டிய அவசிய மில்லை.. எனினும் நாளடைவில் உறவுகளுக்குள் தேவையில்லாமல் சிக்கல்களை, குழப்பங்களை எழுவதை இது தடுக்க உதவும்.
எனவே, சட்டப்பூர்வமானது மற்றும் அதிகாரப்பூர்வமானது என்பதால் உயில்களை எழுதியதுமே அதை பதிவு செய்வது நல்லது.
உயில் நகல்: அத்துடன், உயிலின் நகலை பதிவு அலுவலகத்தில் கொடுத்துவிடுவது இன்னும் சிறந்தது. உயிலுக்குரிய சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் வருகிறதோ, அங்கு மட்டுமே பதிவு செய்ய வேண்டும்..
உயில் எழுதுவதற்கு ஆவணங் கள் எதுவும் தேவை இல்லை. ஒருவர் சாதாரண பேப்பர் முதல் பத்திர தாள்கள்வரை எதில் எழுதியிருந்தாலும் அந்த உயில் சட்டப்படி செல்லும்.
ஆனால், உயிலில் சொத்தின் விவரங்கள் தெளிவாக எழுதியிருக்க வேண்டும். முக்கியமாக, வேறு யாருக்காவது சொத்து கொடுத் திருந்தால், அதையும் உயிலில் தெளிவாக குறிப்பிட வேண்டும். உயில் சாசனத்தை எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம்..
உயில் வாரிசுகள்: உயிலை கையில் எழுதுவது நல்லது.. வழக்குரைஞர் முன்னிலையில்தான் எழுத வேண்டும் என்ற கட்டா யம் இல்லை என்றாலும், சிவில் வழக்குரைஞரை உடன் வைத்துக் கொண்டு உயில் எழுதினால் நல்லது.
உயிலின் நம் பகத் தன்மைக்காக குறைந்த பட்சம் 2 சாட்சிகள் தேவை. வாரிசுகள் சாட்சிகளாக இருக்கக் கூடாது. உயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் சாட்சிகளின் கையெ ழுத்து, அவர்களின் நிரந்தர அட்ரஸ் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
ஒருமுறை உயிலை எழுதி விட்டால், அதை திருத்த முடியாது என்று பலர் நினைக்கிறார்கள். ஒருவர் எழுதிய உயிலை தாராள மாக திருத்தம் செய்யலாம்.. ரத்தும் செய்துவிடலாம்.
ஆனால், எத்தனை முறை திருத்தம் செய்தாலும், கடைசி யாக எழுதப்பட்ட உயிலே செல்லுபடியாகும். ஒருவேளை, 18 வயது நிரம்பாத மைனர் மீது உயில் எழுதப்பட்டால், அதற்கு காப்பாளர் ஒருவரையும் நியமிக்க வேண்டும்.
கையெழுத்து: அதேபோல, உயில் எழுதியவர் அதில் திருத்தங்களை செய்தால், திருத் திய இடத்தில் தன்னுடைய கையெழுத்தை முழுதாகவோ, குறியீடாகவோ தெளிவாக குறிப் பிடப்படவில்லையானால், அந்த திருத்தத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது என்று உச்சநீதி மன்றம் கடந்த 2011ஆம் ஆண்டில் வழக்கு ஒன்றில் தீர்ப் பளித்திருந்தது.
அதாவது, உயிலை எழுதியவர் அதில் திருத்தம் செய்வதாக இருந்தால், திருத்தி எழுதப்பட்ட வாசகங்களுக்கு அருகிலோ, அந்த பத்திரத்தின் பக்கவாட்டிலோ, கீழோ இடைவெளியில் தன் னுடைய கையெழுத்தை பதிவு செய்தால்தான், அது அவருடைய திருத்தம் என்று ஏற்றுக்கொள்ள முடியும் என்று கோர்ட் விளக்கி யிருந்தது.
உச்சநீதிமன்றம்: அதுமட்டுமல்ல, உயிலை எழுதியவரால் திருத்தங் களை செய்ய முடியாமல், வேறொருவரை கொண்டு திருத்தம் செய்தால், அப்படி திருத்தியதற்கு நல்ல சாட்சிகளை வைத்து கொண்டு செய்ய வேண்டும். அதுவும் குறிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அப்போது வலியுறுத்தியிருந்தது நினைவு கூரத்தக்கது.