28.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* டில்லி மதுபான கொள்கை வழக்கில் பிஆர்எஸ் மூத்த தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் பிணை: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு நீதிபதிகள் கண்டனம்
தி டெலிகிராப்:
* வரி பயங்கரவாதம் என்பது பா.ஜ.ஆட்சியின் ஆபத்தான முகம். நடுத்தர வர்க்க மக்களின் வருமானத்தின் மீது இன்று இந்தியாவில் வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் ஊதியம் பல ஆண்டுகளாக அதிகரிக்கவில்லை. பிரதமர் மோடி தனது நண்பர்களின் செல்வத்தை காப்பாற்றவும், அதிகரிக்கவும் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் முதுகை உடைக்கிறார் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ரயில்வே வாரியத்தின் தலைவராக சதீஷ் குமார் நியமனம். 119 ஆண்டு கால வரலாற்றில் இவர் இந்த அமைப்பின் தலைவராக இருக்கும் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் ஆவார்.
* ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பாது காப்பு அதிகரிப்பு. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு இணையாக இசட் பிளஸில் இருந்து மேம்பட்ட பாதுகாப்பு இணைப்பாக (ஏஎஸ்எல்) மேம்படுத்தப்பட்டுள்ளது
* புதிய கருத்துக் கணிப்பில் ‘தேசத்தின் மனநிலை’யில் மாற்றம். 49% மோடிக்கு ஆதரவு. இது 5-6 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட ஆறு சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது. ராகுலுக்கு ஆதரவு 9% அதிகரித்துள்ளது.
– குடந்தை கருணா