திருவாரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
திருவாரூர், ஆக.27- திருவாரூர் மாவட்கோ் கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் அரங்கில் 17.08.2024 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட தலைவர் வீ.மோகன், மாவட்ட துணைத் தலைவர் கி.அருண் காந்தி மாநில இளைஞரணி துணை செயலாளர் அஜெ.உமாநாத் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது.
கூட்டத்தில், திருத்துறைப்பூண்டி நகர அமைப்பாளர் ப.சம்பத்குமாரின் தாயார் சுசீலா, திருவாரூர் ஒன்றியம் வடகுடி கழக தோழர் குணசேகரன் அவர்களின் இணையர் விஜயா, குடவாசல் ஒன்றிய துணைத் தலைவர் அம்பேத்கர் அவர்களின் தாயார் பொன்னம்மாள், மற்றும் திருவாரூர் நகர மகளிரணி தலைவர் பிரியா அவர்களின் தாயார் சுமித்ரா ஆகியோருக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது எனவும், திருவாரூர் மாவட்டம் முழுவதும் குறைந்தபட்சம் ஒன்றி யத்துக்கு இரண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பரப்புரை பொதுகூட்டம் மற்றும் பெரியார் பிறந்த நாள் பொதுகூட்டம் நடத்து வது எனவும், அதன்படி திருவாரூர் ஒன்றிய, நகரம் 4, திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகரம் 4, நன்னிலம் ஒன்றி யம் 2, குடவாசல் ஒன்றியம் 2, கொரடாச்சேரி ஒன்றியம் 2, மாவட்ட கழகம் ஒன்றும் ஆக 15 கூட்டங்கள் நடத்துவது எனவும், நீட் தேர்வு பரப்புரைப் பயணத்தில் திருவாரூர் மாவட்ட கழகம் சார்பாக கலந்து கொண்டு சிறப்பாக பங்கேற்ற மாநில இணை இளைஞரணி துணைச் செயலாளர் அஜய்.உமா நாத், கழக சொற்பொழிவாளர் தேவ.நர்மதா, மாணவர் கழகத் தோழர் சு.தர்மசீலன் ஆகியோருக்கு இக்கூட்டம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது எனவும், உலகத் தலைவர் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள். விழாவை செப்டம்பர் 17 அன்று ஒன்றிய, நகர, கிளை கழகங்கள் தோறும் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு 62 ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளை மாவட்ட கழகம் சார்பாக தெரிவித்து கொள்ளப்பட்டது.
ஒன்றியத்திற்கு
பொறுப்பாளர்கள் நியமனம்
திருவாரூர் ஒன்றியத்துக்கு மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் நேரு, கோ.செந்தமிழ் செல்வி, திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்கு தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி. நன்னிலம் ஒன்றி யத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் க.முனியாண்டி.குடவாசல் ஒன்றியத்திற்கு மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீர.கோவிந்தராஜ், முத்துப்பேட்டை ஜாம்புவனோடை பகுதி புதிய தோழர் ரெ.கருணாநிதிக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட வர்கள் சு.சித்தார்த்தன், நகரத்தலை வர் திருத்துறைப்பூண்டி, க.முனியாண்டி பொதுக்குழு உறுப்பினர், சீ. சரசுவதி மாவட்ட மகளிரணி செயலாளர், கழகச் சொற்பொழிவாளர் தேவ.நர்மதா, கோ.செந்தமிழ்ச்செல்வி, சு.தர்மசீலன் மாணவர் கழகம், கே.ரேணுகா வட குடி, க.சரோஜா திருவாரூர் ஒன்றிய மகளிரணி தலைவர், கா.கவுதமன் திருவாரூர் ஒன்றிய தலைவர், ஜெ.கனகராஜ் திருவாரூர் ஒன்றிய துணைத் தலைவர், மு.சரவணன் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர், ரெ.கருணாருதி ஜாம்புவானோடை, அ.பழனிசாமி வடுகக்குடி, க.சிவ ராமன் நகர தலைவர் திருவாரூர், தி.பாலகிருஷ்ணன் அச்சித மங்கலம், ச.கரிகாலன் நன்னிலம் ஒன்றிய ப.க. தலைவர், இரா.தன்ராஜ் நன்னிலம் ஒன்றிய தலைவர், இரா.அறிவழகன் ஒன்றிய செயலாளர் திருத்துறைப்பூண்டி., இரா.நேரு மாவட்ட தொழிலாளரணி செய லாளர், செ.பாஸ்கரன் திருவாரூர் ஒன்றிய இளைஞரணி தலைவர், அ.இராஜேந்திரன், திருவாரூர் ஒன்றிய துணை செயலாளர், கே.முருகையன் திருப்பள்ளி, முக்கூடல், ரெ.ஈவேரா திருவாரூர் மாவட்ட ப.க. தலைவர், சி.அம்பேத்கர் குடவாசல் ஒன்றிய துணைத் தலைவர், சி.இளங்கோவன் காட்டூர், சீ.கா ராஜா திருவாரூர், வீ.பாக்கியராஜ் கீழப்பாவூர், ப.சம்பத்குமார் திருத்துறைப்பூண்டி நகர துணைச் செயலாளர், ப.ஆறு முகம் திருவாரூர் நகர செயலாளர், எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி மாவட்டத் துணை தலைவர், வீர.கோவிந்தராஜ் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர், அஜெ.உமாநாத் மாநில இளைஞரணி துணை செயலாளர்.
நிறைவாக சு.தர்மசீலன் நன்றி கூறினார்.