27.8.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பில் குளறுபடி: எதிர்ப்பு கிளம்பியதால் முதல் பட்டியல் திரும்பப் பெறப்பட்டது.
* முருகன் மாநாட்டு தீர்மானங்கள், கல்வியில் காவிமய மாக்கும் முயற்சி, வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் கருத்து
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சென்னை பல்கலைக்கழகத்தில் 536 பணியிடங்களில் 350 காலியாக உள்ளன; கடந்த 11 ஆண்டுகளாக நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு எதுவும் இல்லை.
தி டெலிகிராப்:
* உ.பி.முதலமைச்சர் யோகி, பிரதமர் ஆக விரும்பு கிறார்: வங்கதேசம் குறித்து யோகி ஆதித்யநாத் கருத்துக்கு அகிலேஷ், முன்னதாக ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதித்யநாத், வங்கதேசத்தில் நடந்த ‘ஒற்றுமை’ மற்றும் ‘தவறுகளை தவிர்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
* ‘பிராமண’ கண்ணோட்டங்கள் பாடத்திட்டத்தில் நீடிக்கின்றன: டெல்லி பல்கலைக்கழகத்தின் சட்டப் படிப்புக்கு எதிரான மனுவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் ஆசிரியர்களின் அமைப்பு முறையிட்டது
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தேசிய கல்விக் கொள்கையின் (NEP) விதிகளை ஏற்காததற்காக, சமக்ரா சிக்ஷா அபியான் (SSA) கீழ் தமிழ்நாட்டிற்கு முதல் தவணையாக ரூ.573 கோடியை ஒன்றிய கல்வி அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது.
* விவசாயிகள் போராட்டத்தில் கொலை, பாலியல் வன்கொடுமை நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து; ‘விவசாயிகளுக்கு அவமானம்’: கங்கனா ரணாவத்தின் கருத்துக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்.
– குடந்தை கருணா