மனம் தளராமை: என் கனவுக்கான சாவி

viduthalai
2 Min Read

சாலை விபத்தால் தனது வலதுகால் மூட்டுப் பகுதியில் உலோக தட்டு பொருத்திய கணத்தில், அந்த தட்டு தான் தனது புதிய கனவுக்கான சாவி என்பதை தமிழ்செல்வி உணரவில்லை. காவலராகும் அவரது சிறு வயது கனவு மறுக்கப்பட்டது. ஆனால் இன்று, ‘பாடி பில்டிங் – பவர் லிப் டிங்’ களத்தில் அவரை நிலைநிறுத்தி இருக்கிறது காலம்!
கணவர் சண்முகம், மகள்கள் ரிதன்யா, ஜோவிஷாவுடன் கோவை, குரும்ப பாளையத்தில் வசிக்கும் தமிழ்செல்வி உடற்பயிற்சி கூடத்தின் பயிற்றுநர்!

கனவுகளற்ற பட்சத்தில்
வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்?

“தடகள வீராங்கனை கனவுக்கு வீட்டில் தடை போட்டப்போது ஏமாற்றம் இருந்திருக்காது. காவலர் தேர்வுக்கு வந்த கடிதத்தை மறைத்து திருமணம் செய்து வைத்ததைக் கேள்விப்பட்டு மனம் வலித்திருக்காது. மீண்டும் காவலர் தேர்வுக்கு கடிதம் வந்து கணவர் மறுத்த போது, துவண்டிருக்க மாட்டேன். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் குளிர் சாதனத்தில் வைத்த பழம்போல வாழ்க்கை இருந் திருக்கும்!” என்கிறார்.

தனது கால் மூட்டுப் பகுதியை குணப் படுத்தவே உடற்பயிற்சிக்கூடம் சென்றார் தமிழ்செல்வி. பிறிதொரு களத்தில் தன்னை மீட்டெடுக்கும் உந்துதலை உடற்பயிற்சிகள் தரவே, 2018இல் உதயமானது ‘பாடி பில்டிங் (உடல் பலம்) – பவர் லிப்டிங் (பளு தூக்குதல்)’ கனவு!

ஒரே நேரத்தில்
இரண்டு களம்… எதனால்?

‘பாடி பில்டிங் (உடல் பலம்)’ செய்ய கட்டுப்பாடோடு சாப்பிட வேண்டும்; ‘பவர் லிப்டிங் (பளு தூக்குதல்)’ செய்ய நிறைய சாப்பிட வேண்டும். தசை களை இறுக்கமாக்க, ‘பாடி பில்டிங் (பளு தூக்குதல்)’ போட்டிக்கு நான்கு நாட்களுக்கு முன்பு உணவு சாப்பிட, தண்ணீர் குடிக்க, எச்சில் விழுங்க என்று நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன.
“விவரிக்க முடியாத சிரமங்களை தந்தாலும் என் மனக்காயங்களுக்கு மருந்தாகவும், என்னை நான் நேசிக்கவும் இந்த இரண்டு களங்களும் உதவுகிறது!” எனும் அவேர் தனியார் அமைப்பு நடத்திய ‘ஆசியா பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் மாடல் – 2022’இல் வெண்கலம் வென்றபோது தமிழ்செல்வியின் வயது 37. ‘மிஸ் தமிழ் நாடு’ உட்பட மாநில அளவில் பல பதக்கங் களும் வென்றிருக்கிறார்.

என் பயணம் என் மகள்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. சிக ரெட் பழக்கத்தை என் கணவர் கை
விட்டிருக்கிறார்.

அவ்வளவுதானா?

அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பு கள் நடத்துகிற போட்டியில் பங்கெடுக்க நிறைய அரசியலை கடந்து வர வேண்டியிருக்கிறது. தனியார் அமைப்புகள் நடத்துகிற போட்டிகளில் பங்கெடுக்கின்றதால் அரசுப்பணி, அரசு ஊக்கத்தொகைக்கான வாய்ப்புகள் இல்லை!

ஆனாலும்… யார் அங்கீகரிக்கத் தவறினாலும்… தன் திறமையை பெரு மிதத்துடன் கொண்டாடத் தவறுவதில்லை தமிழ்செல்வி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *