“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்

viduthalai
8 Min Read

கணியூரில் நடைபெற்ற பரப்புரைப் பெருமழை!

கணியூர், ஆக. 27- தாராபுரம் மாவட்ட கழகம் சார்பில் சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு- பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பரப்புரைக் கூட்டம் கணியூர் பகுதியில் 22.8.2024 அன்று மாலை 6 மணி அளவில் ஒன்றிய தலைவர் நா.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது
மாவட்டத் தொழிலாளர் அணி சிவகுமார் வரவேற்புரை வழங்க பொதுக்குழு உறுப்பி னர்கள் கி.மயில்சாமி, புள்ளியாண், ஒன்றியச் செயலாளர் மா.தங்க வேல், ப.க. மாவட்ட செயலாளர் த.முருகேசன், மாவட்ட துணை தலைவர் ச.ஆறுமுகம், பழ.நாகரா சன் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

சிறப்பு அழைப்பாளராக கணியூர் பேரூராட்சித் தலைவர் செந்தமிழ்ச் செல்வி பத்மநாபன் பங்கேற்றார். மாவட்ட தலைவர் க.கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் தம்பி பிரபாகரன் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்து கருத்துரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கழக சொற்பொழிவாளர் இரா.அன்புமதி தொடக்கவுரையில், தமிழ்நாட்டிற்கு காந்தியார் வருகைதந்த போது ஒரு வீட்டில் தின்னை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டதையும், தந்தை பெரியார் அவர்களால் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் பிரச்சாரம் செய்த பிறகு அதே வீட்டில் சமையல் கூடம் வரை அனுமதிக்கப்பட்டதையும் எடுத்து கூறியதோடு சம உரிமை சமுதாயம் அமைய தந்தை பெரியார் விரும்பிய பெண்ணுரிமை பெற பெண் கல்வி பெற வேண்டும், மக்கள் மூட நம்பிக்கைகளில் இருந்து விழிப்படைந்து பகுத்தறிவு உள்ள மனிதனாக தந்தை பெரியார் வழியில் வாழவேண்டும் என எடுத்து கூறினார்

தொடர்ந்து கழகப் பேச்சா ளர் தி.என்னாரெசு பிராட்லா சிறப்புரையாற்றினார். அவர்கள் உரையில், நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கம் தத்துவங்கள் பகுத்தறிவு கொள்கைகள் மனித நேய கருத்துகளை பரப்ப தந்தை பெரியார் தொடர் பிரச்சாரங்களை செய்தார். அதன் கொள்கை வழியில் வந்த திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும் சுட்டிக் காட்டிய தோடு இந்திய அரசியல் சட்டம் அடிப்படை கடமைகள் குறித்தும் அறிவியல் மனப்பான்மையையோடு நாம் வாழவேண்டும், அறிவியல் சிந்தனைகளை படிக்க வேண்டும் பரப்ப வேண்டும் என பல்வேறு செய்திகளுடன் விளக்கமாக சிறப்புரை நிகழ்த்தினார்

நிகழ்ச்சியில், இளந்தென்றல், இனியன், நா.மாயவன், ந.மனோகரன், வினோத்குமார், காந்தி (எ) மாரிமுத்து, சதீஸ், த.நாகராசன், கி.கண்ணன், மு.மோகன், கு.முருகானந்தம், க.அர்ச்சுனன், கலையரசன், கு.முருகேசு, தர்மன். மா.தர்மன், பொன்னரசு ,சித்திக் உள்ளிட்ட கழக தோழர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.
நிறைவாக நகர செயலாளர் நா.முத்தரசு நன்றியுரையாற்றினார்.

குறிப்பு : கணியூரில் நடை பெற்ற கழக கூட்டத்தில் புதிய தோழர் இர்ஃபான் தம்மை கழகத்தில் இனைத்து கொண்டார். கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

மதுரையில் எழுச்சியுடன் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்புக் கூட்டம்

திராவிடர் கழகம்

மதுரை, ஆக. 27- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மூட நம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு அரசியல் சட்ட விளக்க பரப்பரைக் கூட்டம் மதுரையில் தமிழக எண்ணெய் பலகாரம் முன்பாக 22-08-2024 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட காப்பாளர் தே. எடிசன் ராஜா தலைமை தாங்கினார். பெரி.காளியப்பன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் பழக்கடை அ.முருகானந்தம்,
சே முனியசாமி, முனைவர் வா. நேரு, சுப. முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைவர் அ. முருகானந்தம், பேராசிரியர் நகைச்சுவை அரசு சுப.பெரியார் பித்தன் நடத்திய மந்திரம் அல்ல, தந்திரமே என்ற அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பேராசிரியர் சுப.பெரியார் பித்தன் பல்வேறு தந்திர காட்சி களை நடத்திக்காட்டி, திராவிடர் கழகம் மட்டுமே தமிழ்நாடு தழுவிய அளவில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மக்களுக்கு ஏற்படும் அய்யங்களை களைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. எனவே, உழைக்கும் சமூகமான நம் தமிழ் சமுதாயம் நாம் ஈட்டிய பொருளை பணத்தை நமக்கும் நம் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பயன்படுத்த செலவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

நிறைவுரையாக கழக சொற்பொழிவாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் ஆற்றிய சிறப்புரையில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கொண்டாடுவதன் நோக்கம் அதன் மூலமாக நம் இயக்கம் செய்த பணிகள் தமிழ் சமுதாயம் இதனால் அடைந்த பயன்கள் ஆகியவற்றை விளக்கிக் கூறினார்.

தமிழ்நாட்டில் நிலவும் மூட பழக்க வழக்கங்களை தகர்த்தெறிய வேண்டும் அதற்காகத்தான் தமிழர் தலைவர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் 100 கூட்டங்களை நடத்தி அதில் மூடநம்பிக்கை ஒழிப்பு,பெண்ணுரிமை பாது காப்பு, அரசமைப்பு சட்ட விளக்கக் கூட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறோம் எனக் கூறினார்.

நிகழ்வில், மாவட்டத் துணைத் தலைவர்கள் ‌இரா.திருப்பதி, பொ.பவுன்ராஜ், நா. முருகேசன், மாவட்ட இளை ஞர் அணி அமைப்பாளர் வேல்துரை, துணைத் தலைவர் அருள்தாஸ்புரம் ராஜா, புதூர் பாக்கியம்‌, கா.சிவகுருநாதன், சண்முகசுந்தரம், பேக்கரி கண்ணன், நாகராணி, ராக்கு, உசிலை மாவட்ட பக.தலைவர் ச.பால்ராஜ், சடகோபன், மாணவர் கழகம் தேவராஜ் பாண்டியன், சு.மணிராஜ்‌. ஜே.எஸ்.மோதிலால், மசு.மோதிரால் கோரா, முரளி, செல்லத்துரை, ரமேஷ், நல்ல தம்பி, முருகேசன், பாண்டி தனசேகரன், ஆட்டோசெல்வம், கேசவன் மற்றும் ஏராளமான தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிறைவாக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வேல் துரை நன்றி கூறினார்.

கல்லக்குறிச்சி மாவட்டம் சார்பில் தெருமுனைக்கூட்டம்

திராவிடர் கழகம்

 

கல்லக்குறிச்சி, ஆக. 27- கல்லக்குறிச்சி மாவட்ட தி.க., ப.க. சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு,இந்திய அரசியல் சட்டம் 51A(h)பிரிவு விளக்க தெருமுனைக்கூட்டம் 24.8.2024 அன்று மாலை அம்பேத் கர் சிலை அருகில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முத்து சாமி நகர தலைவர் வரவேற் புரையாற்றவும், மாவட்ட தலைவர் கோ.சா.பாஸ்கர் இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு பற்றியும், நீதி மன்றங்களில் நீதிபதிகளின் வருகை பற்றியும், காமராசர், தந்தைபெரியார் காலம் முதல் இன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் காலம் வரை கல்வி வளர்ச்சி பற்றி கழக பேச்சாளர் வா.தமிழ் பிரபாகரன் சிறப்புரையாற்றியும், மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு பற்றி கழக பேச்சாளர் யாழ் திலீபன் சிறப்புரையாற்றவும், மாவட்ட காப்பாளர் ம.சுப்பராயன், மாவட்ட துணைத்தலைவர் குழ.செல்வராசு, மாவட்ட ப.க. இலக்கிய அணி தலைவர் புலவர் பெ.செயராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கவும் மாவட்ட ப.க. தலைவர் பெ.எழிலரசன், மாவட்ட ப.க செயலாளர் வீ முருகேசன், சங்கராபுரம் ஒன்றிய திக தலைவர் பெ. பாலசன்முகம், இளைஞரணி தோழர் ஏழுமலை, மேலூர் பழனிமுத்து, முத்துசாமி நகர தலைவர், பெரியார் நகர செயலாளர், ஆசிரியர் தமிழரசன், ஆகியவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட ப.க. தலைவர் பெ.எழிலரசன் நன்றியரை யாற்றவும் தெருமுனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

குன்னூரில் பரப்புரைக் கூட்டம்

திராவிடர் கழகம்

மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 24.8.2024 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜீவா தலைமை தாங்க, மாவட்ட தலைவர் நாகேந்திரன் வரவேற்றாார். சிறப்புரையாக மரு.கவுதமன், கழக பேச்சாளர்கள் புளியகுளம் க.வீரமணி, இரா. அன்புமதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அ.மு. இராசா, ஈஸ்வரன், ஆ. கருணாகரன், மூர்த்தி,. தினகரன், திருநாவுக்கரசு, சத்தியநாதன், இராவணன், முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். இ.ராம்குமார் நன்றி கூறினார்.

காங்கேயத்தில் பிரச்சாரக் கூட்டம்

திராவிடர் கழகம்

காங்கேயம், ஆக. 27- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு- பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசமைப்பு சட்டம் 51A(H) விளக்க பரப்புரை கூட்டம் காங்கேயம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர தலைவர் மணிவேல் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் முத்து.முருகேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். திருப்பூர் மாவட்ட தலைவர் யாழ்.ஆறுச்சாமி, திருப்பூர் மாவட்ட செயலாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு-அறிவியல் விளக்க செய்முறை நிகழ்வாக மந்திரமா? தந்திரமா? நிகழ்வை திண்டுக்கல் ஈட்டி மு.கணேசன் நடத்திக் காட்டினார். இந்த நிகழ்வை பள்ளி மாணவ, மாணவிகள் பெரியவர்கள், தாய்மார்கள் என பெருங்கூட்டமாக நின்று கேட்டு தெளிவு பெற்றனர்.

பிறகு நிறைவாக கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் கவி, பெரியாரின் பெண்கள் அமைப்பு பொறுப்பாளர் தோழர் ஜென்னி, திராவிடர் கழக பொறுப்பாளர் கோபால், வி.சி.க. ஆதித் தமிழர் பேரவை கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் தாராபுரம் சண்முகம் நன்றி கூறினார்.

உசிலம்பட்டியில் சிறப்புக்கூட்டம்

திராவிடர் கழகம்

உசிலம்பட்டி,ஆக.27- உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் திருமங்கலம் நகர் தந்தை பெரியார் சிலை முன்பு நடைபெற்ற, சுயமறியாதை இயக்க நூற்றாண்டு விழா, பெண்ணுரிமை பாது காப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) விளக்க பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை: மொ. தங்கதுரை பகுத்தறிவாளர் கழகம், முன்னிலை: த. ம. எரிமலை உசிலம்பட்டி கழக மாவட்ட தலைவர், பா முத்துக்கருப்பன் உசிலம்பட்டி கழக மாவட்ட செயலாளர், இரா. கலைச்செல்வி உசிலம்பட்டி கழக மாவட்ட மகளிரணி செயலாளர், வரவேற்புரை: மு. சண்முகசுந்தரம் திருமங்கலம் நகர தலைவர், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தியவர்: சுப. பெரியார் பித்தன், சிறப்புரை: இராம. அன்பழகன் கழக சொற்பொழிவாளர், கருத் துரை: நா. கணேசன் மாநில வழக்குரைஞர் அணி துணை செயலாளர், கா. சிவகுருநாதன் தொழி லாளர் பேரவை தலைவர், பஙகேற்றோர்: பெ. பாக்கிய லட்சுமி மகளிரணி செயலாளர் பா. அழகன் பகுத்தறிவாளர் கழகம், போ. காவேரி மகளிரணி, சதீஷ்குமார் மாணவர் கழகம், ஏ.பி.சாமிநாதன் இளைஞரணி செயலாளர், ம.ரஞ்சித்குமார் மாணவர் கழகம், ச. அறிவுப்பாண்டி மாணவர் கழகம், விசாலி, சந்தோஷம், மாதேஷ், சுஜித்ரா, கவின் மாறன், நன்றியுரை: ச.அறிவுச் செல்வி மாணவர் கழக செயலாளர்.

கடலூரில் பெண் உரிமை பாதுகாப்பு விளக்க பொதுக்கூட்டம்

திராவிடர் கழகம்

கடலூர், ஆக. 27- கடலூர் புதுப் பாளையத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு பெண் உரிமை பாதுகாப்பு இந்திய அரசி யல் சட்ட பிரிவு 51A(h) விளக்க பரப்புரை பொதுக்கூட்டம் 22.8.2024 அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மாநகர தலைவர் தென் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

மாநகர செயலாளர் இரா சின்னத்துரை அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட செயலாளர் க. எழிலேந்தி, மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், வடலூர் நகர தலைவர் சு.இராவணன், மாவட்ட இளைஞரணி தலைவர் நா. உதயசங்கர், அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோ தரன் தொடக்க உரை ஆற்றினார். கழக துணை பொது செயலாளர் வழக் கறிஞர் சே.மே.மதிவதனி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் ஆர்.தர்மன், இரா.சுந்தரமூர்த்தி, பெ.தமிழரசன்,

இரா.தனசேகரன், நூலகர் இரா.கண்ணன், தங்க பாஸ்கர், பா.செந்தில் வேல், ராஜேந்திரன், கோ.கிருஷ்ணமூர்த்தி, ந.கனகராசு, இரா.பெரியார் செல்வம், பீமாராவ், ராம்ஜி, பால்கி, தோழர் பாலு பேராசிரியர் கோமதி, வழக்கறிஞர் அழகரசன், ஓவியர் ரமேஷ், பழ.ஆறுமுகம், விசிக தி.ச.திருமார்பன் ஆகியோரும் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நூலகர் தி.மாதவன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *