திருவள்ளூா், ஆக.27- திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தை அறிவுக் களஞ்சியமாக்கும் வகையில் பூங்கா உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் நவீன நூலகம் தயாராகி வருவதால், எப்போது திறக்கப்படும் என அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, வனத் துறை, மாவட்ட காவல் கண் காணிப்பாளா், மாவட்ட விளையாட்டு மைதானம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வளாகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் செயல் பட்டு வருகின்றன.
இந்த அலுவலகங்களில் அதி காரிகள் மற்றும் அலுவலா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து நாள்தோறும் நூற்றுக் கணக்கானோர் வந்து செல்கின்றனா்.
இதுபோன்று வருவோர் நாள் தோறும் நாட்டு நடவடிக்கைகளை அறிந்து கொள்ளவும் வேண்டும். அதேபோல், மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடா்பாக ஒவ்வொரு துறை அதிகாரிகளும், போட்டித் தோ்வுகளுக்கு தயாராகி வரும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் அறிவுத் திறன்களையும் வளா்த்துக் கொள்ளவும் முடியும்.
இதற்காகவே ஆட்சியா் அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் நவீன நூலகம் தயாராகி வருகிறது. இந்த நூலகத்துக்கு வருவோர் அமைதியாக புத்தகங்கள், நாளிதழ்களை வாசிக்கும் வகையில் மூங்கில்களுக்கு இடையே அமைத்த பூங்காவில் இருக்கைகள், மேஜைகள், குடிநீா் போன்ற வசதியும் உள்ளன.
ஏற்கெனவே போட்டித் தோ்வுக்கு தயாராகி வரும் பட்டதாரி மாணவ, மாணவிகள் பயன்பெற ஏதுவாக மாவட்ட ஆட்சியா் த.பிரபு சங்கா் கற்றல் மய்யங்களையும் ஏற்படுத்தி யுள்ளார்.
இதற்கிடையே ஆட்சியா் அலுவல கத்தில் அறிவுக் களஞ்சியமாக புதிதாக நூலகம் அமைக்கப்பட்டு வருவதால், போட்டித் தோ்வுக்கு தயாராகி வருவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நூலகத்தில் தமிழ்நாட்டின் வரலாறு, இந்திய வரலாறு, தலைவா்களின் வரலாறு, அறிவியல், விஞ்ஞானம் போன்ற பல்வேறு புத்தகங்கள் இடம் பெற உள்ளன. மேலும், உலக வரை படங்கள் இந்திய வரைபடங்கள் மற்றும் பொன்மொழிகள் ஆகியவை சுவரில் இடம் பெற உள்ளன.
எனவே அறிவுக் களஞ்சியமாகும் வகையில் அமைந்துள்ள நூலகத்தின் திறப்பை மாணவா்கள், அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஆா்வத்துடன் எதிர்பார்த்துள்ளனா்.