“இலங்கையில் பூமியைத் தோண்டும் போது கிடைத்த 2 டன் எடையுள்ள தங்கத்தினால் ஆன ‘கதை’ லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லப்படுகிறது. இராமாயணம் வெறும் கதையல்ல ராமர் சீதை அனுமார் எல்லாம் வாழ்ந்தவர்கள் என்பது எல்லாம் உண்மை’’ என்று கூறி ஒரு படத்தை பதிவிட்டி ருந்தார்கள்.
துர்க்கா சிலை ஊர்வலம், விநாயகர் சிலை ஊர்வலம், போன்று ‘கதா’ யாத்திரை என்ற பெயரி லான ஊர்வலம் ஜபல்பூரில் மட்டும் நடக்கிறது.
இது 2016 ஆம் ஆண்டு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினரால் துவங்க முடிவு செய்யப்பட்டு. 2017 முதல் ஜபல்பூரில் மட்டும் தொடர்ந்து இந்த கதா யாத்திரையை நடத்துகின்றனர்.
இது தொடர்பாக ஜபல்பூர் விசுவ ஹிந்து பரிஷத் பிரமுகர் சொரூப் சந்திர ராய் என்பவர் கூறும் போது, ‘‘ஹிந்துக்களிடையே ஹிந்து மதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த யாத்திரையை நடத்துகிறோம்’’ என்கிறார்.
அட்டை மற்றும் மூங்கில் ஆகியவற்றைக் கொண்டு மிகப் பெரிய ‘கதா’ போன்று செய்து, அதை 4 நாள் காட்சிக்கு வைத்து 5ஆம் நாள் ஊர்வலமாகக் கொண்டு செல்வோம் என்றார்.
‘கதா’வின் வரலாறு என்னவென்றால் அனு மானுக்கு வித்தியாசமான உருவம் கொடுத்தது போல் ஆயுதத்தையும் வித்தியாசமாகக் கொடுக்கவேண்டும் என்பதற்காக துளசி ராமாயணத்தில் அனுமானின் கத(வலிமையான தோள்) என்ற சொல்லை வைத்து கதாயுதம் என்று மாற்றிவிட்டார்கள்.
அறிவியல் சோதனைகளை அடிக்கடி செய்து சமூக வலைதளத்தில் வெளியிடும் இயற்பியல் மாணவர்கள் குழு ஒன்று ‘கதா’யுதத்தை போருக்கு பயன்படுத்த முடியுமா என்ற ஒரு ஆய்வை நடத்தினர்.
அந்த ஆய்வின் முடிவில் கதாயுதத்தை போரில் மட்டுமல்ல வீட்டுச்சண்டையில் கூட பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டது.
காரணம் இயற்பியல் விதிப்படி எந்த ஒரு பொருளின் முனையும் சிறியதாக இருந்தால் மட்டுமே எளிதாகவும், வேகமாகவும் பயன்படுத்த முடியும்; எடுத்துக்காட்டாக ஈட்டி, வேல் போன்றவை.
முனையில் கனமுள்ள பொருட்களாக இருந்தால் இரும்படிக்க வேண்டுமென்றால் பயன்படுத்தலாம்; சுத்தியல், சம்மட்டி என்று சான்றுகளோடு செய்து காட்டினர்.
அதன்படி ‘கதா’யுதம் என்ற அனுமானின் கையில் உள்ள ஆயுதம் எதற்குமே பயன்படாது.
கடவுளைப் பரப்புகிறோம், மதத்தைப் பரப்புகிறோம் என்று சொல்லுவதிலிருந்தே அவற் றிற்கென்று தனி சக்தியும் இல்லை, ஒரு மண்ணாங் கட்டியுமில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்து விட்டதே!