26.8.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*மோடி ஆட்சியில் குடும்ப வருமானம் சரிவை சந்தித்து வருகிறது, காங்கிரஸ் குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு இந்தியா உடந் தையாக இருக்க முடியாது’: ஆயுத விநியோகத்தை நிறுத்துமாறு ஒன்றிய அரசை கேட்டு எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை. பாஜக கூட்டணியில் உள்ள அய்க்கிய ஜனதா தளத்தின் கே.டி.தியாகியும் கையெழுத்திட்டார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒடிசா மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் ஒடிசா சட்டமன்றம் இரண்டு முறை முடங்கியது.
தி இந்து:
* காங்கிரஸ் தொடர்ந்து சமூக நீதியை தனது அரசியல் மய்யமாக வைக்கும் என்பது தெளிவாகிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீதியை உறுதி செய்யும் கொள்கை கட்டமைப்பின் இன்றியமையாத படியாக ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பை நிலைநிறுத்தி பேச்சு.
தி டெலிகிராப்:
* மோடி அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ஊழியர் சங்கங்கள் நிராகரிப்பு; முந்தைய ஓய்வூதியத் திட்டம் தொடர வேண்டும் என்று போராட்டம்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்ற ராமன் சிலை திறப்பு விழாவிற்கு மட்டும் ரூ.113 கோடி செலவு, அறக்கட்டளை தகவல்.
– குடந்தை கருணா