கிருட்டினகிரி மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன் – மங்கம்மாள் ஆகியோரின் மகன் சீ.வீரமணி – பிரியங்கா சாயி ஆகியோருக்கு மணவிழா நடைபெற்றதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் சார்பாக ரூபாய்.1000/- நன்கொடையாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர். மணமக்களுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். உடன் கிருட்டினகிரி தி.மு.க.நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப், கிருட்டினகிரி தி.மு.க.நகர்மன்றத் துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (கிருட்டினகிரி 25-08-2024)