நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும், செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதையுள்ள நாடாகவும் இருக்க வேண்டுமானால், முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில், பூசை ஆகியவை ஒழிந்தாக வேண்டும். இவற்றை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும், வைரமுமாக ஆக்கினாலும், சமுத்திரங்களையெல்லாம் பாலும், நெய்யும், தேனுமாக ஆக்கினாலும் மேற்கண்ட உற்சவம், சடங்கு, கோயில், பூசை, பண்டிகை ஆகியவைகளே சாப்பிட்டு விடும்.
(‘குடிஅரசு’ 20.10.1929)