திருவாரூர், ஆக.26- திருவாரூரில் பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஈவேரா தலைமை வகித்தார்.
தலைமை கழக அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கழக சொற் பொழிவாளர்கள் நர்மதா, செந் தமிழ்ச்செல்வி, பகுத்தறிவாளர் கழக நன்னிலம் ஒன்றியத் தலைவர் கரிகாலன், மாவட்ட இளைஞ ரணி தலைவர் பிளாட்டோ, பகுத்தறி வாளர் கழக செயல் வீரர்கள் வேத மூர்த்தி, அய்யப்பன், நாகராஜன், தியாகராஜன், தமிழ்மணி, விஜய கணேஷ், வீரக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பகுத்தறிவு ஆசிரியரணி மேனாள் மாநில அமைப்பாளர் சிவகுமார் வரவேற் றார். இறுதியில் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
திருவாரூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாளையொட்டி 31.8.2024 அன்று திருவாரூர் ஹோட்டல் செல்வீஸ் கோல்டன் ஏசி ஹாலில் 10,11,12 வகுப்புகளுக்கு ஒரு பிரிவாகவும், கல்லூரிக்கு ஒரு பிரிவாகவும் பேச்சுப் போட்டி நடத்துவதெனவும்,
திருச்சியில் டிசம்பர் மாதம் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக மாநில மாநாட்டிற்கு, திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் பேருந்து ஏற்பாடு செய்து பெருந்திரளாக கலந்துக் கொள்வது எனவும்,
செப்டம்பர் -28இல் திருவாரூர் வர்த்தகர் சங்க ஏசி ஹாலில் திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா, போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடத்துவது எனவும்,
தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வில் வென்று திருத்துறைப் பூண்டி மாநகராட்சி ஆணையர் பதவியேற்றுள்ள தூய்மைப் பணி யாளரின் மகள் துர்கா அவர்களுக்கு இக்கூட்டம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. அதற்கான பணி ஆணை வழங்கிய தமிழ்நாடு அரசை பாராட்டுவதோடு, பெண் கள் முன்னேற்றத்திற்காகவும் சமூகநீதிக்காகவும் போராடி, இவ்வெற்றிக்கு காரணமான தந்தை பெரியார் அவர்களை இக்கூட்டம் பெருமையுடன் நினைவுகூர்ந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறது எனவும்,
செப்டம்பர் 28இல் நடைபெறும் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழாவில் 10, 11, 12ஆம் வகுப்பு பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 3000த்தை பெரியார் பெருந்தொண்டர் எரவாஞ்சேரி .மாஸ்டர் அரங்கராஜன் நினைவாக வழங்க முன்வந்துள்ள முன்னாள் மாவட்டச் செயலாளர் அரங்க.ராஜா, இரண்டாவது பரிசு ரூபாய் 2000-அய் பெரியார் பெருந்தொண்டர் குடவாசல் கணபதி அவர்களின் நினைவாக வழங்க முன்வந்துள்ள குடவாசல் ஒன்றியச் செயலாளர் அசோக்ராஜ், மூன்றாவது பரிசு ரூபாய் 1000அய் பெரியார் பெருந்தொண்டர் மஞ்சுக்குடி கு.சிவானந்தம் அவர்களின் நினைவாக வழங்க முன்வந்துள்ள குடவாசல் ஒன்றிய துணைத் தலைவர் சி.அம்பேத் ஆகியோருக்கு இக்கூட்டம் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது எனவும்,
கல்லூரிப் பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு 3000அய் பெரியார் பெருந்தொண்டர் இரா.கோதண்டபாணி நினைவாக பெரியார் பெருந்தொண்டர் இரா.கோதண்டபாணி நினைவு தந்தை பெரியார் அறக்கட்டளை வழங்க முன் வந்தமைக்கும், இரண்டாம் பரிசு 2000-அய் பெரியார் பெருந்தொண்டர் மஞ்சக்குடி கல்யாணி அவர்களின் நினைவாக வழங்க முன்வந்துள்ள குடவாசல் ஒன்றிய தலைவர் என்.ஜெயராமன், மூன்றாம் பரிசு 1000அய் பெரியார் பெருந்தொண்டர் கடாரம்கொண்டான் அ.அறிவுக் கண்ணு அவர்களின் நினைவாக வழங்க முன்வந்துள்ள திருவாரூர் நகர இளைஞரணித் தலைவர் அ.செல்வேந்திரன் ஆகியோருக்கும் இக்கூட்டம் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது எனவும்,
திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மாதம் ஒரு தெருமுனை கூட்டமும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கருத்தரங்கமும் நடத்துவதெனவும், அனைத்து வகையான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தந்தை பெரியார் அவர்களின் ஒளிப்படம் இடம்பெற செய்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.