தோறும் கழகக் கொடியேற்றி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடிட தஞ்சை மாநகர கலந்துரையாடலில் முடிவு!
தஞ்சை, ஆக.26- தஞ்சாவூர் மாநகரம்,வடக்கு,தெற்கு ஒன்றிய கலந்துரையாடலில் செப்டம்பர்-22 தஞ்சையில் பெரியார் பட ஊர் வலம் எழுச்சியுடன் நடத்துவது, செப்டம்பர்-17 தஞ்சாவூர் மாநகரம் ஒன்றிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று கிளைகள் தோறும் கழகக் கொடியேற்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சி யுடன் கொண்டாடிட முடிவு செய் யப்பட்டது.
தஞ்சாவூர் மாநகரம் தஞ்சாவூர் தெற்கு வடக்கு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 24-8-2024 அன்று மாலை 6.30 மணியளவில் தஞ்சாவூர் ராஜவீதி பெரியார் இல்லத்தில் நடைபெற்றது
மாவட்ட இளைஞரணி செய லாளர் ஆ. பிரகாஷ் கடவுள் மறுப்பு கூறினார் தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா.வீரக்குமார் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார்.
திராவிடர் கழக தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன் நிகழ்வுக்கு தலைமை ஏற்று உரையாற்றினார்.
தஞ்சை மாநகர செயலாளர் செ. தமிழ்ச்செல்வன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை தஞ்சாவூரில் மிக எழுச்சியுடன் கொண்டாடு வதுடன் தஞ்சை மாநகர முழுவதும் 60 இடங்களில் பெரியார் படங்களை வைத்து சிறப்பிக்க வேண்டும் என உரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண் டாட வேண்டியது அவசியம் குறித்தும் தந்தை பெரியாருக்கு மறைந்து 50 ஆண்டுக்குப் பிறகும் திராவிடர் கழகத்தை எழுச்சியோடு வழிநடத்தி “பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம்” என்ற முழக்கத்துடன் நாளும் உழைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய பணிகள் குறித்தும் கழகத் தோழர்கள் தொடர்ந்து களப்பணி ஆற்ற வேண்டியது அவசியம் குறித்தும் தொடக்க உரையாற்றினார்.
தஞ்சை தெற்கு ஒன்றிய செயலா ளர் அ.இராமலிங்கம், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் மாத்தூர் ப.சுதாகர், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் காசி.அரங்கராஜன், மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஜெயமணி குமார், கலைச்செல்வி, கரந்தை பகுதி தலைவர் விஜயன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செய லாளர் லட்சுமணசாமி, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சந்துரு, மாவட்டம் மகளிர் பாசறை அமைப்பாளர் அஞ்சுகம், மருத்து வக் கல்லூரி பகுதி தலைவர் கோவிந்தராஜ், கராத்தே மாஸ்டர் விக்கி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.அழகிரி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனி வேல் பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாவட்ட கழக செயலாளர் வழக் குரைஞர் அ.அருணகிரி , காப்பாளர் மு.அய்யனார் ஆகியோர் உரைக்கு பின் இறுதியாக தஞ்சை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்கள் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பட ஊர்வலம் நடத்துவது குறித்து உரையாற்றினார்.
மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வன் நன்றி கூறினார்.
திராவிடர்கழகமாநிலஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், மாநில மாணவர் கழகசெயலாளர்இரா.செந்தூரபாண்டியன், தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா.சேகர், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா. இளவரசன், மாத்தூர் முனியப்பன், ர.ஜனார்த்தனன், ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராமன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
கூட்டத்தில், தமிழ் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் எண்ணற்ற மாணவர்களை பெரியார் கொள்கை யின் பால் ஈர்த்த உரத்தநாடு ஒன்றியம் தெக்கூர் புலவர் கோவிந்தராஜ், திருவையாறு நகரத் தலைவர் ராயம்பேட்டை கவுதமன் அவர்களின் தாயார் கனகாம்பாள் ஆகியோர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலும் வீரவணக்கமும் தெரிவிக்கப்பட்டது எனவும்,
4-8-2024 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்து எனவும், தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் விழாவினை எழுச்சியோடு கொண்டாடிடும் வகையில் 17-9-2024 அன்று தஞ்சாவூர் மாநகரம் தஞ்சாவூர் வடக்கு,தெற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் பெரியார் சிலை மற்றும் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்குவது இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று கிளைகள் தோறும் கழகக் குடியேற்றி எழுச்சியுடன் கொண் டாடுவது, தஞ்சாவூர் மாநகரம் முழுவதும் 60 இடங்களில் பெரியார் படத்தை வைத்து மாலை அணி விப்பது எனவும் அன்று மாலை உரத்தநாட்டில் நடைபெறும் பெரியார் பட ஊர்வலத்தில் அனைத்து தோழர்களும் பங்கேற்று சிறப்பிப்பது எனவும், தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 26-08-2024 தஞ்சை பாரத் கல்லூரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பெருவாரியான மாணவர்களை பங்கேற்க செய்வது முழு ஒத்துழைப்பு வழங்குவது எனவும், தஞ்சாவூர் மாநகரம் மற்றும் தஞ்சாவூர் தெற்கு வடக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கழக அமைப்புகளிலும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கூட்டங்களை தொடர்ந்து நடத்துவது எனவும், தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 22-9-2024 ஞாயிறு அன்று தஞ்சாவூர் மாநகரில் பெரியார் பட ஊர்வலத்தை மிக எழுச்சியுடன் நடத்துவது மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது மாவட்டம் முழுவதும் உள்ள கழகத் தோழர்கள் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
புதிய பொறுப்பாளர்கள்
தஞ்சாவூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாத்தூர் ர.ஜனார்த்தனன், மாவட்டச் செயலாளர் அருணகிரிக்கு பிறந்த நாள் வாழ்த்து.
மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி அவர்களின் 58ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத் தலைவர் அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக் குமார், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் இராமலிங்கம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்னரசு, மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் மாநகர இணை செயலாளர் இரா.வீரக்குமார் ஆகியோர் பயனடை அணிவித்து 58ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.