ஆயுள் மருத்துவக் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி வரியை விலக்க வேண்டும்! எல்.அய்.சி. காப்பீட்டு கழக ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

1 Min Read

சென்னை, ஆக.26- காப்பீட்டுத் தொகை பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை முழுமை யாக ரத்து செய்ய வேண்டுமென சேலம் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

24.8.2024 அன்று எல்.அய்.சி. காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தின் சேலம் கோட்ட மாநாடு அய்ந்து சாலை பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவா் ஆா்.நரசிம்மன் தலைமை யில் நடைபெற்ற மாநாட்டில், பொதுச் செய லாளா் ஆா்.ஆனந்தன் வரவேற்றார்.

இம்மாநாட்டில், காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை மேலும் உயா்த்தக் கூடாது. காப்பீட்டுத் தொகை பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியினை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான வன்முறைகளைத் தடுக்க வலிமையான சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாக நிறை வேற்ற வேண்டும்.

பொதுத்துறை நிறுவன மான எல்.அய்.சி.யின் பங்குகளை ஒன்றிய அரசு மேலும் விற்பனை செய்யக் கூடாது. தொழிலாளா் நல சட்டங்களை மீண்டும் மாற்றி அமைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 14 தீா்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இதுகுறித்து காப்பீட்டு ஊழியா் கூட்டமைப்பின் தென்மண்டல இணைச் செயலாளா் எஸ்.ரமேஷ்குமார்

செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காப்பீட்டு ஊழியா் களின் முக்கிய கோரிக்கை யாக இருக்கும், ஆயுள் மற்றும் மருத்துவக் காப் பீட்டுக்கான ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வேண்டும்.

ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெறாவிட்டால் அடுத்தகட்டப் போராட் டம் குறித்து வரும் டிசம்பா் மாதம் சென்னையில் நடைபெற இருக்கும் அகில இந்திய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றாா்.
இம் மாநாட்டில், செயற்குழு உறுப்பினா் எம்.கே. கலைச்செல்வி, தென் மண்டல காப்பீட்டு ஊழியா் கூட்டமைப்பின் துணைத் தலைவா் ஆா்.தா்மலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *