திருச்சி, ஆக.25- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் 23.08.2024 அன்று திருச்சி மாநகராட்சி நகர ஆரம்ப சுகாதார மய்யத்தின் மூலம் மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை அவர்களின் வழிகாட்டுதலில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மய்யத்தின் நகர்ப்புற சுகாதார செவிலியர் ஏ.ரீட்டா மேரி மற்றும் கிராம சுகாதார செவிலியர் நான்சி ஆகியோர் ஆல்பென்டசோல் (Albendazole) மாத்திரைகளை மாணவர்களுக்கு வழங்கினர். குடற்புழுத் தொற்றினால் ஏற்படும் குருதிச் சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைவதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் நாடு அரசு குடல்புழு நீக்க மருந்து மாத் திரைகளை தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கினர். இதில் 300 மாணவர்கள் மாத் திரைகள் உட்கொண்டு பயனடைந்தனர்