25.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அஜித் பவார் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் சிக்கல்; மகாராட்டிரா பாஜக தலைவர்கள் எதிர்ப்பு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம், மோடி அரசு அறிவிப்பு.
* புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு, தெலங்கானா அரசு ஊழியர்கள் எதிர்ப்பு. பழைய ஓய்வூதியத் திட்டமே தேவை என வலியுறுத்தல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 90 சதவீத மக்கள் பயன்பெற ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: ராகுல் மீண்டும் வலியுறுத்தல்
* டில்லியில் கட்டப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்.-இன் எட்டு மாடி அலுவலக கட்டடத்திற்கு, உரிய ஆவணங்கள் இல்லாததால், டில்லி நகர்ப்புற கலை ஆணையம் அனுமதி வழங்க மறுப்பு.
தி டெலிகிராப்:
* மதம், லவ் ஜிகாத், வெள்ள ஜிகாத் என்ற பெயரில் பாஜக சமூகத்தில் விஷத்தை பரப்புகிறது: ஜார்க் கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாக, அரசியல் திறமை சிறப்பாக உள்ளது. அண்டை மாநிலங்களில், அரசியல் சந்ததியினர் தங்கள் முன்னோர்களால் நிறுவப்பட்ட கட்சிகளை நடத்த போராடுகிறார்கள், பலர் தோல்வியடைந்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் கட்சியை மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என திரைக் கலைஞர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்
– குடந்தை கருணா