இன்றைய தினம் எத்தனைக் கடவுள்கள் பணக்காரக் கடவுள்களாகவும், ஏழைக் கடவுளாகவும் இருக்கின்றன? ஒரு கடவுளோ சோற்றுக்குக் கூட வழி இன்றி, சொத்து ஒன்றும் இன்றியும் இருக்கின்றதே! மற்றொன்றுக்கோ 10 ஏக்கர், இன்னுமொன்றுக்கோ நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள். இது உண்டா – இல்லையா! இன்னும் ஆயிரக்கணக்கான மிகப் பணக்காரச் சாமிகளும் இருக்கின்றன. இவைகளுக்கெல்லாம் ஏன் இந்த சொத்துகள் – கடவுளே சர்வ வல்லமையுள்ளதாக இருக்கிறபோது அதற்குச் சாப்பாட்டுக்கு நிலமா கேட்கிறது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’