மயிலாடுதுறை, நவ.27 கடல் சீற்றத்தால் மயிலாடுதுறை மா வட்ட மீனவர்கள் 6 ஆயிரம் பேர் நேற்று கட லுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம்அருகே பழையாறு மீன்பிடி துறை முகத்திலிருந்து தினமும் 350 விசைப்படகுகள் 300 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீனவர்கள் மீன் பிடித்துவருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இந்நிலையில்கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் மீனவர்கள் 6000 பேர் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் பழையாறு துறைமுக வளாகத்தில் மீன் வலை பின்னுதல்,மீன்களை பதப்படுத்துதல், விற்பனைக்கு அனுப்பி வைத்தல், கருவாடு உலர வைத்தல், பனிக்கட்டி தயாரித்தல் உள்ளிட்ட பல் வேறு பணிகளில் ஈடு பட்டு வரும் மேலும் 2000 தொழி லாளர்களும்பாதிக்கப் பட்டனர்.மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசை படகுகள் பழையாறு படகு அணையும் தளத்தி லும்,துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ள பக்கிங் காம் கால்வாயிலும் பாதுகாப் பாக நிறுத்தப்பட்டுள்ளன.
பைபர் படகுகள் கடற் கரை மணலில் நிறுத்தப்பட்டுள் ளன. இதேபோல் மேலும் மடவாமேடு, கொட்டாய் மேடு, கூழையாறு ஆகிய கிராமங்களிலிருந்து சுமார் 300 பைபர் படகுகள் மூலம் கடலுக்கு செல்லும் 1500 பேர் நேற்று கடலுக்கு செல்ல வில்லை. நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு சென்றனர்.