பெரியார் புத்தக நிலைய மேலாளர் மறைந்த மானமிகு டி.கே. நடராசன் அவர்களின் இல்லத்திற்கு நேற்று (23.8.2024) காலை குடும்பத்துடன் சென்று, அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
டி.கே. நடராசன் அவர்களின் மகன் கண்ணுதுரை மற்றும் அவரது வாழ்விணையர் சுசீலாவிடம் நேரி்லும், அமெரிக்காவில் உள்ள மற்றுமொரு மகன் மணவாளனிடம் தொலைபேசி வாயிலாகவும் ஆறுதலும், இரங்கலும் தெரிவித்தார்.