சென்னை, ஆக. 24- பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் இதுவரை 39 சதவீத இடங்கள் நிரம்பின. கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு ஆகிய பாடப் பிரிவுகளில் சேர மாண வர்கள் ஆர்வம் காட்டினர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 433 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் உள்ளன. 2024- 25ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 836 மாணவ,மாணவிகளுக்கு பொறியியல் படிப்புக்கான இடங் கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. தற்போது,2 சுற்று கலந்தாய்வுகள் முடிவுற்றுள்ளன. இதில், பொதுப் பிரிவில் 62 ஆயிரத்து 802 மாண வர்களுக்கும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 8 ஆயிரத்து 308 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் இது வரை 71 ஆயிரம் இடங்கள் நிரம்பி உள்ளன. இதன்மூலம், மொத்த இடங்களில் 39 சதவீத இடங்கள் நிரம்பி உள்ளன. சென்னை கிண்டி வளாக கல்லூரி (சி.இ.ஜி), எம்.ஐ.டி உள்பட 4 கல்லூரிகளில் 100 சதவீத இடங்கள் நிரம்பி உள் ளன. மேலும், 14 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், ஒன்றிய கல்வி நிறுவனங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமான பொறியியல் படிப்பு இடங்கள் நிரம்பி உள் ளன.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரையில், 21 கல்லூரிகளில் 90 சத வீத இடங்கள் நிரம்பின. 57 கல்லூரி களில் 80 சதவீத இடங்களும், 114 கல்லூரிகளில் 50 சதவீதம் இடங்களும் நிரம்பி உள்ளன. அதேநேரம், 30 பொறியியல் கல்லூரி களில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், 197 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் கீழ் மாணவர் சேர்க்கை நடை பெற்றுள்ளது.
இந்த நிலையில் 3ஆவது சுற்று கலந்தாய்வு வருகிற செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி வரை நடை பெறுகிறது. நாளை (25.8.2024) வரை மாணவர்கள், விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வு தொடர்பாக, கல்வியாளர் ஜெய பிரகாஷ் காந்தி கூறுகை யில், ‘நடப்பு கல்வியாண்டு பொறியியல் கலந்தாய்வு நிறைவில், கிட்டத்தட்ட 55 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. தற் போது, பொறியியல் படிப்பில் கணினி அறிவியியல், செயற்கை நுண்ணறிவு தரவு அறிவியல் ஆகிய படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர் வம் காட்டினர். 2 சுற்று கலந்தாய்வு நிறைவில், 110 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று உள் ளது. இந்த கல்லூரிகளால் மாணவர்களுக்கு சிறந்த கல் வியை வழங்கமுடியுமா என்ற கேள்வி எழுகிறது’ என்றார்.