சென்னை, ஆக. 24- தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் பெல்லோஷிப் திட்டத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களைத் தொகுத்து செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக 25 பேர் முதலமைச்சர் பெல்லோஷிப் திட்டத்தில் (Tamilnadu Chief Minister’s Fellowship programme – 2024-26) பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 26.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
முதலமைச்சர் பெல்லோஷிப் திட்டம்
பணியிடங்களின் எண்ணிக்கை: 25
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு தொழிற்கல்வி படிப்புகளில் (Engineering, Medicine, Law, Agriculture, Veterinary Science) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அல்லது கலை அல்லது அறிவியல் (Arts and Science) படிப்புகளில் முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 26.08.2024 அன்று 22 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், பி.சி/ எம்.பி.சி பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
உதவித்தொகை: ரூ. 65,000 + 10,000
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு (Preliminary Assessment), விரிவான விடையளித்தல் தேர்வு (Comprehensive Examination) மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tn.gov.in/tncmfp/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tn.gov.in/tncmfp/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.