வாசிங்டன், ஆக. 24- பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு (அய்எஸ்எஸ்- ISS) மூன்றாவது முறையாக பயணம் மேற்கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நாசாவின் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான ஸ்டார்லைனரை சோதிக்க, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர், கடந்த ஜூன் 5ஆம் தேதி விண்வெளிக்குச் சென்றனர். எட்டு நாட்களில் சோதனைப் பணிகளை முடித்துவிட்டு பூமிக்கு திரும்புவதுதான் திட்டம், ஆனால் தொழில்நுட்ப கோளாறு கள் காரணமாக இப் போதுவரை அவர்களால் திரும்பி வர முடியவில்லை.
அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண் கலத்தில் ஏற்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப கோளாறுகளைச் சரிசெய்ய தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
அதேசமயத்தில், வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி க்ரூ 9 (Crew 9) என்ற திட்டத் தின் கீழ், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் கொண்ட குழுவை அனுப்பவுள்ளது நாசா.
ஸ்டார்லைனர் விண் கலத்தின் தாமதத்தால் க்ரூ 9 திட்டம் பாதிக்கப்படுமா?
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மிகப்பெரிய சவால்கள் உள்ளன என்ற பரபரப்பான நிலை ஏற் பட்டுள்ளது.