கரூர், ஆக.24- கரூர் சுய மரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, அரசியல் சட்டம் 51A(h,)பிரிவு விளக்க பரப்பரைக் கூட்டம் கரூர் உழவர் சந்தை எதிரில் 20ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெற்றன.
கரூர் மாவட்ட திரா விடர் கழக தலைவர் ப. குமாரசாமி தலைமையில் நடைபெற்றன. மு சேகர் மாநில தொழிலாளர் அணி செயலாளர், மாவட்டச் செயலாளர் காளிமுத்து வரவேற்பு உரை ஆற்றினர்.
கழக பேச்சாளர் கோவை வீரமணி, பொன் அருண் குமார் ஆகியோர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா சிறப்பு குறித்தும் ,
மூடநம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு அரசியல் சட்டம் 51ஏ எச் பிரிவு விளக்கமாக பேசினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பு, கட்டளை வைரவன், ம,ஜெகநாதன், மு க ராஜசேகரன் மாநில வழக்குரைஞரணி துணைத் தலைவர், மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ், காப்பாளர் வே ராஜு, கரூர் ஒன்றிய தலைவர் நானா பரப்பு பழனிச்சாமி, கலை இலக்கிய பேரவை செயலர் ராமசாமி, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பொம் மன், இளைஞர் அணி தோழர்கள் ராஜா, விக் னேஷ் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் நன்றி உரை மாவட்ட செயலாளர் காளிமுத்து கூறினார்.