நான் எனது ஊரில் முனிசிபல் சேர்மனாக இருந்தபோது, போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் இருந்த மரங்களை வெட்ட வேண்டியதாயிற்று. அவைகளை வெட்டும்படி உத்தரவு போட்டேன். அவைகளில் பிசாசு இருக்கிறது; அவற்றை வெட்ட முடியாது என்று சொல்லி விட்டார்கள். பின் அவற்றை ஏலம் விட்டேன். பிசாசு இருந்த மரம் என்று சொல்லி எவனுமே ஏலம் எடுக்க வரவில்லை. பிறகு அதை நானே ஏலத்தில் எடுத்து எனது ஆட்களைக் கொண்டு வெட்ட வேண்டியதாயிற்று. நான் மரங்களை வெட்டியதும் நான் இந்த மரங்களைக் குறைந்த விலைக்கு எடுத்துக் கொண்டேன் என்று கலெக்டருக்கு ரிப்போர்ட் செய்தார்கள். கலெக்டர் என்னைக் கேட்டார், நீ என்ன மரங்களைக் குறைந்த ரூபாய்க்கு ஏலம் விட்டு எடுத்துகொண்டாயாமே என்றார். உடனே நான் மரங்கள் ஒன்றுமாகவில்லை. நீங்களே மறு ஏலம் விட்டுக் கொடுங்கள் என்றேன். அதன்பின் உண்மையை உணர்ந்து கொண்ட கலெக்டர் மறு ஏலம் விடுவாரா என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1413)
Leave a Comment